நான் இந்தியாவின் நண்பன் தாங்க.. நம்புங்க: அமெரிக்க அதிபர் வேட்பாளர் Joe Biden
உலக அரங்கில் இந்தியா தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக நிலை நிறுத்தி வருகிறது என்பதற்கான மற்றொரு சான்றாக, அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், தான் இந்தியாவிற்கு உறுதுணையாக இருப்பேன் என பறைசாற்றியுள்ளார்.
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவில் செல்வாக்கு அதிகரிக்கது வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை, இதை உறுதிபடுத்தும் விதமாக, அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden), தான் அதிகராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பல சாவல்களை சந்தித்து வரும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருப்பேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் மாதம் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump ) 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் நோக்கில் துணை அதிபராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் என்பவரை ஜனநாயக கட்சி நிறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் Joe Biden, அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவர தான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், இந்தியா தற்போது பல வித பிரச்சினைகளையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து வரும் நிலையில், அதை தீர்க்க அந்நாட்டுக்கு உறுதுணையாக நிற்போம் என கூறியுள்ளார்.
ALSO READ | COVID-19 Vaccine தயாரிப்பை தொடங்கியுள்ள ரஷ்யா.. சந்தேகத்தை கிளப்பும் விஞ்ஞானிகள்..!!!
மேலும், இந்தியாவும் அமெரிக்காவும் இயல்பால்கவே நட்பு நாடுகள் எனவும் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் 74-வது சுதந்திரதினவிழாவை, அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நேற்று கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், 15 ஆண்டுகளுக்கு முன், துணை அதிபராக இருந்த போது, இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு தான் முக்கிய பங்காற்றியதை குறிப்பிட்டார்.
ALSO READ | ‘Joe Biden-ன் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது’ – Donald Trump
இந்தியாவும், அமெரிக்காவும் மிக நெருங்கிய நட்புநாடுகளாக இருந்தால், இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும் என அப்போதே தான் குறிப்பிட்டதாக கூறினார்.