அமெரிக்கா: உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் தேர்தலில் 14 கோடியே மேலாக வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி ஓட்டு ப்போட்டுவிட்டனர். வழக்கமான தேர்தலைவிட இந்த தேர்தலில் குடியசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்பப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்ன் இருவருக்கும் இ டையே கடுமையான போட்டி நிலவுகிறது. வழக்கமான தேர்தலைவிட அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை யுகிக்க முடியாத அளவு கடும் போட்டி நிலவுவதால் பெரும் எதி ர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர ஹிலாரியும், டிரம்பும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் நேற்று ஈடுப்பட்டு இருந்தனர்.


உலகமே மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று அமெரிக்க மக்கள் வாக்களித்து வருகின்றன. தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் வாக்கு ப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள், வாக்குப்பதிவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது.


புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் 45வது அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.