டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!
டிரம்ப்பின் பயணத்தடை உத்தரவுக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ‘பச்சைக்கொடி’ காட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சத், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள டிரம்ப் தடை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்துள்ளார். இந்த நாடுகளில் பெருமளவில் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். டிரம்பின் இந்த முடிவு இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு உருவானது. எனினும் அவர் தனது முடிவை செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்தார்.
இதனிடையே டிரம்பின் பயண தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை வழங்கி உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்தையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர், டிரம்பின் கொள்கை முடிவை முழு அளவில் செயல்பட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.