வாஷிங்டன்/லண்டன்: ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எகிப்து, கத்தார் உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்துச்செல்வதற்கு அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா அறிவித்துள்ள திட்டத்தைப் பிரிட்டனும் அமல்படுத்தி உள்ளது.


துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்துள்ளது. 


லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் உள்ளே வெடிக்கும் விதமான வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கிவைத்து கொண்டு வரலாம் என கருதுவதால் இந்த முடிவை பிரிட்டன் அரசு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.