சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் போரின்போது சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது. உள்நாட்டு எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன. இதை சிரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. 


இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் சற்று தாழ்வாக பறந்து வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த வி‌ஷ வாயு தாக்குதலில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருகின்றனர். இதுவரை குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக சிரியா மிகவும் கடினமாக விலையை கொடுக்க வேண்டியதாயிருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.


சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா மீண்டும் ஒரு அதிரடி தாக்குதல் நடத்த தயங்காது என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சியான் ஸ்பைசர் தெரிவித்துள்ளார். 


மேலும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகவே எங்களது முதன்மையான தாக்குதல் இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மட்டீஸ் கூறியுள்ளார்.