மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவர் கூறியதாவது:மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர்களை கைது செய்ய வேண்டும். தங்கள் நாட்டில் வளரும் பயங்கரதத்தை அழிக்கும் நடவடிக்கைகள் பாகிஸ்தான் மேற்கொள்ளாவிட்டால், உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.


ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஜி-20 மாநாட்டில் பேசியதாவது:- தென்கிழக்கு ஆசியாவில் ஒரு நாடு மட்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து, பயங்கரவாதத்தை பரப்பி வருவதாக பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசினார். அதுமட்டுமில்லாமல் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருவோரை தனிமைப்படுத்த வேண்டும் என உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தாதல் அடிபணிந்த பாகிஸ்தான் மும்பை தாக்குதலுக்கு காரணமான லஸ்கர்-இ-தொய்பா சேர்ந்த ஷகியுர் ரஹ்மான் லக்வி மற்றும் 6 பேர் கைது செய்யப் பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நோட்டீசு அனுப்ப கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.