பெண் குளித்ததை ரகசிய கேமராவில் படம் பிடித்து, ஆபாச தளங்களில் பதிவிட்டதாக ஹில்டன் ஹோட்டலுக்கு எதிராக 100 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிகாகோவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பார் கவுன்சில் தேர்வுக்காக நியூயார்க் சென்றிருந்தபோது ஹாம்ப்டன் (Hampton) ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கூறியுள்ளார். தாம் குளித்ததை ரகசிய கேமராவில் படம் பிடித்து ஆபாசத் தளங்களில் தமது முழுப் பெயருடன் பதிவிட்டுவிட்டதாகவும், 3 ஆண்டுகளுக்குப் பின் இது தாங்கள் தானே? எனக் கேட்டு தமக்கே யாரோ அதன் லிங்க்-ஐ மின்னஞ்சலில் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், புதிய வீடியோ என பதிவிட்டு தாம் அனுப்பியதுபோல் தமது வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு அதை அனுப்பிய நபர், மாதத்துக்கு ஆயிரம் டாலர் தருமாறு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அதன் பொருட்டு ஏற்பட்ட மருத்துவ செலவு, பணியிழப்பை ஈடுகட்ட 100 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.


இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் விசாரணையில் ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. இருந்த போதும் விசாரணை நடைபெற்று வருகிறது!