வெனிசுலா அதிபர் Nicolas Maduro பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெனிசுலா தேசிய படைகளின் 81-வது ஆண்டு விழா கராகசில் நடைபெற்றது. இந்த விழாவில் வெனிசுலா அதிபர் Nicolas Maduro பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் மூலம் அந்நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.   


வெனிசுலா தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களிடம் கூறுகையில், மதுரோ உரையாற்றிய போது ஆளில்லா சிறிய டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக வெனிசுலா அதிபர் Nicolas Maduro உயிர்பிழைத்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.