சீனா தலைநகர் பிஜிங்கில் உள்ள சபாரி வனவிலங்கு பூங்காவிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான குறித்த காட்சி தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூங்காவில் சைபீரியன் புலி உள்ள பகுதியில் பார்வையாளர்கள் பயணித்து வந்த கார் ஒன்று நிறுத்தப்படுகிறது. பின்னர், காரிலிருந்து ஒரு இளம் பெண் பேசிக்கொண்டே கிழே இறங்கி சாலையில் ]நிற்கின்றார். அப்போது திடீரென புலி ஒன்று தாவி வந்து அவரை இழுத்துச் செல்கிறது.உடனே காரில் இருந்த அவரது தாய் மற்றும் மற்றொரு நபர், அப்பெண்ணை மீட்க புலியை துரத்தி செல்கின்றனர். ஆனால் மகளை மீட்க சென்ற தாயை வேறொரு புலி கடுமையாக தாக்கியுள்ளது, இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு இளம் பெண், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பூங்காவில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதை யங்கிங் மாவட்ட அரசு உறுதி செய்துள்ளது.


சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகம் கூறும் போது: பார்வையாளர்கள் சொந்த வாகனத்தில் சுற்றி பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பயணத்தின் போது வாகனத்திலிருந்து கிழே இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.