காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகள் இருவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால், காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பர்கான் வானி கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித், இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து கூறுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பதிலடி கொடுத்தார்.


இந்த நிலையில் காஷ்மீர் விவ்காரத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடபட்டு உள்ளது.  அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:- இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவபடையினரால் காஷ்மீர் தலைவர் பர்கான் வானி மற்றும் காஷ்மீர் மக்கள் கொல்லபட்டத்தற்கு பிரதமர் தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளியிட்டு உள்ளார். பர்கான் வானி கொல்லபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது அதிகப்படியான மற்றும் சட்டவிரோதமான படைகள் பயனபடுத்தப்பட்டு உள்ளன. இது போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மூலம் ஐக்கிய நாடுகள் பாதுக்காப்பு சபையின் தீர்மானங்களுக்கு ஏற்ப ஜம்மு காஷ்மீர் சுய நிர்ணய உரிமை கோரும் எங்கள்  தேவையை தடுத்து விடமுடியாது.


காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களின் கைது கவலையளிக்கிறது. ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் படி மனித உரிமைகளுக்கான கடமைகளை அதன் பொறுப்புகளை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.