சீனாவில் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக கூறப்படும் நிலையில்,  கடுமையான வானிலை காரணமாக  பாலம் ஒன்று  பிளந்து இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நவ் திஸ் நியூஸ் (Now This News) ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் கடுமையான வெப்பம் காரணமாக கியான்ஜோ பாலம் பிளப்பத்தை சித்தரிக்கிறது. பாலம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. பாலம் இடிந்த அன்று அது 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது.இந்த வீடியோ ஜூலை 23 அன்று எடுக்கப்பட்டது என்று CNN செய்தி நிறுவனம் கூறுகிறது. 25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை ட்விட்டரில் 1,52,300க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத உயர் வெப்பநிலை பதிவாகி இருந்தது. பல பிராந்தியங்களில் ஏராளமான மக்கள் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அசோசியேட்டட் பிரஸ் கருத்து கூறியுள்ளது. பேரழிவு தரும் வானிலை நிகழ்வுகளுக்கு காலநிலை வெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் என  AP அறிக்கை மேலும் கூறுகிறது. 


மேலும் படிக்க | Viral News: ₹3,419 கோடி மின்சார பில் கொடுத்த ஷாக்; மயங்கி விழுந்த வீட்டு உரிமையாளர்


பாலங்கள் இடிந்து விழும் வீடியோக்கள் ஆன்லைனில் அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஆண்டு பிப்ரவரியில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், ஃபிராங்க்ளின் புயல் இங்கிலாந்தைத் தாக்கிய பின்னர், வெள்ளத்தில் ஒரு சிறிய பாலம் அடித்து செல்லப்பட்டதைக் காணலாம். பாலம் இடிந்து விழுவதற்கு முன், அதன் அருகே குப்பைகள் குவிந்து கிடப்பதையும் வீடியோவில் காணலாம். அந்த வீடியோவும் மிகவும் வைரலானது.


மேலும் படிக்க | Viral Video: விமானத்தில் வழங்கிய உணவில் ‘பாம்பின் தலை’; அதிர்ச்சியில் உறைந்த பணிப்பெண்


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ