ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக சீனாவை மட்டுமல்ல உலகத்திற்கே மரண பயத்தை காட்டி வருகிறது கரோனா தொற்று. இந்த கடும் நெருக்கடியில் இருந்து பல்வேறு நாடுகள்  மீண்டு வந்தாலும், சீனாவில் நிலைமை சீராகவில்லை என்றுதான் கூற வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து, கரோனா தொற்று பாதிப்பில் முன்னணியில் உள்ள நாடு சீனாதான்., அங்கு பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் உடன் பல ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.


வுஹான் மற்றும் பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் வீடுகளில் தங்கும்படி அரசு ஆணையிட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைச் சரிபார்க்க ட்ரோன்கள் ரோந்து செல்வதாகவும் பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் தெரிவிக்கின்றன. மேலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் தங்களின் குடியிருப்பிலேயே முடங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. 


பல மாதங்களாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்ந்ததால், சீனாவின் பல நகரங்களில் இருந்து பயங்கரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்தன. சமீபத்தில், கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தீடீரென உயர்ந்தது.   ஊரடங்களின் போது மக்கள் மற்றும் விலங்குகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதை எதிர்த்து தெருக்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலான போராட்டங்கள் வெடித்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டன. 


மேலும் படிக்க | 'நானும் ரவுடிதான்' பேஸ்புகில் கமெண்ட்... வாண்டடாக வம்பிழுத்தவரை கொக்கிப்போட்டு போலீஸ்!



கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டாலும், சுகாதார அதிகாரிகள் கடுமையான கண்காணிப்பை தொடர்ந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் பல பகுதிகள் இன்னும் உள்ளன.


தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தொற்று பாதிக்கப்பட்ட நபரை அதிகாரிகள் எவ்வாறு கையாள்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 


சில சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்குச் செல்ல மறுத்ததற்காக ஹாங்சோவில் உள்ள ஒருவரை அவரது வீட்டில் இருந்து வலுகட்டாயமாக வெளியே இழுப்பதாக தெரிகிறது. சில ட்விட்டர் பயனர்களும், செய்தி நிறுவனங்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், அந்த நபர் தொற்று பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.  பின்னர் ஹாங்சோ அதிகாரிகள் அந்த நபரை வலுகட்டாயமாக இழுத்துச்சென்றதற்கு மன்னிப்பு கேட்டனர்.


மேலும் படிக்க | அதிர்ச்சி வீடியோ : 1 வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை... தந்தையும் படுகாயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ