மூன்றாம் உலகப் போர் நடந்தால் முதலில் லண்டன் மீது குண்டு வீசப்படும் என்று விளாடிமிர் புட்டினின் நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைன் மீதான படையெடுப்பால் ஏற்கனவே உலக அரங்கில் அதிருப்தியை ரஷ்யா எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாம் உலகப் போர் வெடித்தால், நேட்டோவின் இலக்காக முதலில் லண்டன் மீத் தாக்குதல் நடத்தப்படும் அது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் கூறியுள்ளார்.


ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான ஆண்ட்ரே குருலியோவ், ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேனல் 1 தொலைகாட்சிக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் படிக்க | உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்


நேட்டோவின் பால்டிக் உறுப்பினர்கள் மீதான முழு அளவிலான படையெடுப்பை எப்படிச் செயல்படுத்துவது என்று ஆண்ட்ரே குருலியோவ். விவாதித்துக் கொண்டிருந்ததாக இங்கிலாந்தைச் சேர்ந்த மெட்ரோ செய்தித்தாள் தெரிவிக்கிறது. 


"போர் தொங்கினால் முதல் விமான நடவடிக்கையின் போது, எதிரியின் விண்வெளி செயற்கைக்கோள்கள் அனைத்தையும் அழிப்போம்" என்று குருலியோவ் தெரிவித்தார்.


விளாடிமிர் புடினுக்கு ஆதரவளிக்கும் முக்கிய அரசியல் கட்சியான யுனைடெட் ரஷ்யாவை இப்போது பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ஆண்ட்ரே  குருலியோவ் என்பது குறிப்பிடத்தக்கது..


நேட்டோ உறுப்பினராக முதலில் இங்கிலாந்து மீது குண்டு வீசும் நடவடிக்கையால் மூன்றாம் உலகப் போருக்கு (World War III) வழிவகுக்கும்.


மேலும் படிக்க | உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா


நேட்டோ நட்பு நாடு ஒன்று ஆயுதம் ஏந்திய தாக்குதலுக்கு ஆளானால், கூட்டணியின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த வன்முறைச் செயலை அனைத்து உறுப்பினர்களுக்கு எதிரான ஆயுதமேந்திய தாக்குதலாகக் கருதி, தாக்கப்பட்ட கூட்டாளிக்கு உதவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நேட்டோ நாடுகளின் விதிமுறைகளின் பிரிவு 5 (clause five of the military alliance of NATO) கூறுகிறது. .


‘அவர்கள் அமெரிக்கர்களா அல்லது பிரித்தானியரா என்பதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள், நாங்கள் அனைவரையும் நேட்டோவாகப் பார்ப்போம். இரண்டாவதாக, எல்லா இடங்களிலும் மற்றும் 100 சதவீதம் ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பின் முழு அமைப்பையும் குறைப்போம். மூன்றாவதாக, நாங்கள் நிச்சயமாக வார்சா, பாரிஸ் அல்லது பெர்லினில் இருந்து தொடங்க மாட்டோம், ”என்று  லெப்டினன்ட் ஜெனரல் ஆண்ட்ரே  குருலியோவ் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


லிதுவேனியாவிற்கும் போலந்திற்கும் இடையில் உள்ள ரஷ்யா அரைகுறையான கலினின்கிராட் பகுதியை மேற்கு நாடுகள் முற்றுகையிடுவதைத் தடுக்க பால்டிக் நாடுகளின் படையெடுப்பே ஒரே வழி என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்


அதுமட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவில் "மின் விநியோகம் துண்டிக்கப்படும்" என்றும், அனைத்தும் அழிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


"மூன்றாவது கட்டத்தில், உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல், குளிரில் தங்கள் போராட்டத்தைத் தொடர்வது குறித்து மேற்கு ஐரோப்பாவிடம் அமெரிக்கா என்ன சொல்லும் என்பதை யூகிக்கலாம்," என்று அவர் தெரிவித்தார். "இந்த நிலையில் அமெரிக்கா எப்படி ஒதுங்கி இருக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.


இவ்வளவு விரிவாக பேசிய ஆண்ட்ரே  குருலியோவ், "இது கடினமான திட்டம், நான் வேண்டுமென்றே சில முக்கியமான விஷயங்களை விட்டுவிடுகிறேன், ஏனெனில் அவை தொலைகாட்சியில் விவாதிக்கப்படக்கூடாது" என்று கூறியது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.


மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR