பெலோசியின் தைவான் பயணம்  பதற்றத்தை தூண்ட "கவனமாக திட்டமிடப்பட்ட " என்று  சாடிய புடின், இது "மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் வகையிலான செயல் என்றும், சர்வதேச பொறுப்புணர்ச்சி இல்லாத்ச செயல் என்றும் ப்புடின் சாடினார். அமெரிக்கா, உக்ரைனில் போர்  நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை புடின் குறிப்பாக சுட்டிக்காட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"போரை  நீடிக்க வேண்டும் என அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதை உக்ரைனின் நிலைமை காட்டுகிறது. மேலும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் போரை தூண்டி விட தொடர்ந்து முயன்று வருகிறார்கள்," என புடின்  கூறியுள்ளார். தைவான் தொடர்பான அமெரிக்காவின் இந்த  சாகச செயல் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் மட்டுமல்ல, பிராந்தியத்திலும் உலகிலும் நிலைமையை சீர்குலைத்து குழப்பமடையச் செய்வதற்கான நோக்கம். இது அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்," என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | சீனாவின் மிரட்டலை மீறி, தைவான் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி


உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்படவும்  வழிவகுத்தது. அணு ஆயுத தாக்குதல் நடக்குமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாஸ்கோ திட்டமிடவில்லை என்றார்.


பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதலை நடத்தியதில் இருந்து, அமெரிக்கா அதன் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகள் அனைத்தையும் எதிர்கொண்டு ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுடன் குறிப்பாக சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்த புடின் முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்... அமெரிக்காவை மிரட்டும் சீனா


மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ