கடந்த 1992 - 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் போஸ்னிய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேரை போர் குற்றவாளிகள் என அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. நேற்று கோர்ட்டில் ஆஜரான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் நீதிபதி கண்முன்னே குப்பியில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு, நான் குற்றமற்றவன் என்றும் தான் விஷம் குடித்துள்ளதாக நீதிபதியிடம் கூறினார்.


இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.