தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணிநீக்கம்; கூகுள் எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை பின்பற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: ஆல்ஃபாபெட் இன்க் (Alphabet Inc) நிறுவனமான கூகுள் (Google) தனது ஊழியர்களுக்கு கோவிட் நெறிமுறைகளைப் (Covid Protocols) பின்பற்றாவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்று கூறியுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Also Read | 100 கோடி தடுப்பூசி சாதனையும், பிரதமரின் உரையும்
இருப்பினும் இன்னும் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது பல நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது உலகளவில் பிரபலமான கூகுள் நிறுவனமும் தடுப்பூசி செலுத்துதல் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்தது.
ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொண்டால் வேறு எதாவது மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சொன்னால் அதற்குரிய மருத்துவரின் ஒப்புதலை அவர்கள் சமர்பிக்க வேண்டும். மேலும் டிசம்பர் 3ஆம் தேதி வரை கூகுள் ஊழியர்களுக்கு கெடு விதித்திருந்தது. தற்போது ஜனவரி 13ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ALSO READ | தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடையாது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR