COVID-19 Vaccination: 100 கோடி தடுப்பூசி சாதனையும், பிரதமரின் உரையும்

கொரோன தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான சந்தேகங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, 100 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனைப் பதிவு செய்துள்ளது 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 22, 2021, 10:42 AM IST
  • 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை
  • தீபாவளியை நிம்மதியாக கொண்டாட இந்த சாதனை உதவும் -பிரதமர்
  • கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டது
COVID-19 Vaccination: 100 கோடி தடுப்பூசி சாதனையும், பிரதமரின் உரையும்  title=

புதுடெல்லி: இந்தியா 100 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த மைல்கல் சாதனையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

முன்னதாக 100 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்ததை முன்னிட்டு, மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில் 30 சதவீத மக்கள், கொரோனா தடுப்பூசி பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதைத் தவிர 70 கோடியே 70 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இன்று தொலைகாட்சியில் நாட்டு மக்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட பிரதமர் மோதி, இந்தியா எப்போது தடுப்பூசிகளை எப்படி பெறும்? எங்கிருந்து வாங்கும், அதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும் என உலகமே இந்தியாவை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தன. பல கேள்விகளையும் எழுப்பின. ஆனால், இன்று இந்தியா 100 கோடி தடுப்பூசிகளை போட்டு, அனைத்து கேள்விகளுக்கும் தனது ஆக்கப்பூர்வமான செயலால் பதிலளித்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Also Read | 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை

இந்தியாவின் தடுப்பூசி சாதனை, உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. 100 கோடி தடுப்பூசி என்பது ஒவ்வொரு இந்தியரின் சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தனது உரையில் குறிபிட்டார்.

கொரோன தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான சந்தேகங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து சாதனைப் பதிவு செய்துள்ளது இந்தியா என்று பிரதமர் தெரிவித்தார்.

தடுப்பூசி போட மக்கள் முன்வர மாட்டார்கள் என்ற கணிப்பும் தவறாகிவிட்டது. ஏழை -பணக்காரர் என எந்தவித பாகுபாடும் இன்றி இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எந்த வேறுபாடுமின்றி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அனைவரின் முயற்சியும் ஒன்றிணைந்ததால் தான் இந்த சாதனையை இந்தியா செய்ய முடிந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

100 crore

பல நாடுகள் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தைப் பாராட்டுகின்றன. உலகில் உள்ள மிகப் பெரிய நாடுகள், கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஈடுபட்டன. இந்தியா, முதலில் வல்லரசுகளால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொண்டிருந்தது என்பதையும் பிரதமர் சுட்டுக்காட்டினார்.

இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து..

இந்த தீபாவளியை நிம்மதியாக கொண்டாடுவதற்கு, 100 கோடி தடுப்பூசி சாதனை உதவியாக இருக்கும், மக்கள் மனதில் கொரோனா தொடர்பான அச்சங்களை இந்த சாதனை போக்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதுடன் தொடங்கிய கொரோனா தாடுப்பூசி இயக்கம், அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.  கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்கப்பட்டு வருகிறது.  

100 கோடி டோஸ் தடுப்பூசிகள் போட்ட சாதனையை முதலில் சீனா கடந்த ஜூன் மாதம் பதிவு செய்தது. தற்போது சீனாவின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.
278 நாட்களில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News