Donald Trump: முகக்கவசம் அணிவது நாட்டுப்பற்றிற்கு ஒரு சான்று!!
கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்காக அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், நீண்ட காலமாக அதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது அதன் மிகப்பெரிய ஆதரவாளராக மாறிவிட்டார்.
கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்காக அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், நீண்ட காலமாக அதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது அதன் மிகப்பெரிய ஆதரவாளராக மாறிவிட்டார். கொரோனா தொற்றுநோயின் போது முகக்கவசம் அணிவது தேசபக்திக்கு மிகப்பெரிய சான்று என்று Trump திங்களன்று ட்வீட் செய்துள்ளார். தன்னைப் புகழ்ந்து பேசி, இந்த விஷயத்தில் தன்னை விட ஒரு பெரிய தேசபக்தன் யாரும் இருக்க முடியாது என்று டிரம்ப் கூறினார். தான் அமெரிக்க மக்களின் பிரபலமான அதிபர் என்றும், முகக்கவசம் அணிந்து தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளது. இவற்றில் பல டிரம்பின் குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகும். இந்த காரணங்கள் அனைத்தும் Trump-ஐ மாற்றியுள்ளன. ஜூலை 11 அன்று முதல் முறையாக டிரம்ப் முகக்கவசத்தில் தோன்றினார்.
அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவரது போட்டியாளர் ஜோ பிடன்(Joe Biden) தொடர்ந்து பொது நிகழ்வுகளில் முகக்கவசம் அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவைத் தவிர்ப்பதற்காக முகக்கவசம் அணிவது தேசபக்தியின் அடையாளம் என்று இப்போது டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். நமது கூட்டு முயற்சியால், இந்த கண்ணுக்கு தெரியாத சீன வைரஸை நாம் தோற்கடிக்க வேண்டும் என அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். தனி மனித இடைவெளியை பராமரிக்க முடியாதபோது முகக்கவசத்தை அணிவது ஒரு நல்ல வழி என்று பலர் கூறுகிறார்கள் என்று டிரம்ப் கூறினார்.
ALSO READ: அமெரிக்காவில் நடத்திய போராட்டத்தில் சீனாவை எச்சரித்த அமெரிக்க இந்தியர்கள்!!
கடந்த பல மாதங்களாக கொரோனோ வைரஸை எதிர்த்து முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் ஆதரவாளர்கள் முகக்கவசம் அணிவது பலவீனத்தின் அடையாளம் என்று நம்பினர். முன்னர் டிரம்ப் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றதோடு, முகக்கவசம் அணிந்து பேரணிகளில் கலந்துகொண்ட ஜோ பிடனை கேலி செய்தார்.
இப்போது டிரம்பின் புதிய அவதாரத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் (America) முகக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், டிரம்பும் முகக்கவசம் அணிவதை ஆதரித்துள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணிவதால், இந்த கொரோனா தொற்றுநோயை தோற்கடிக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ALSO READ: எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவேண்டாம்: ரஷ்யாவுக்கு ஜோ பிடன் எச்சரிக்கை!!