டாவோஸ்: பொருளாதார கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடனான தனது நாட்டின் உறவு இயல்பானதாக மாறும்போது, ​​பாகிஸ்தானின் உண்மையான பொருளாதார திறனை உலகம் உணரும் என்று கூறியுள்ளார். உலக பொருளாதார மன்றத்தில் (WEF) பேசிய பாகிஸ்தான் பிரதமர், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவுடனான எங்கள் உறவுகள் நல்லதல்ல என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இவை இயல்பானதாக இருக்கும்போது, ​​பாகிஸ்தானின் மூலோபாய பொருளாதார ஆற்றலைப் பற்றி உலகம் அறிந்து கொள்ளும் என்று இம்ரான் கான் கூறினார்.


உலக பொருளாதார மன்றத்தில் (WEF) சிறப்பு உரையில் பேசிய இம்ரான் கான், "பாகிஸ்தானை ஒரு நல்ல வளர்ச்சி நாடாக மாற்ற விரும்புவதாகக் கூறினார். அமைதியும் ஸ்திரத்தன்மையும் இருக்கும் வரை பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என்று அவர் வலியுறுத்தினார். அமைதிக்காக மட்டுமே பாகிஸ்தான் மற்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்றும், அமெரிக்காவுடனான உறவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.


மேலும் பேசிய இம்ரான் கான், "எனது வயது தான் ஏறக்குறைய பாகிஸ்தானுக்கும். நான் பிறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் உருவானது. நான் இந்த நாட்டோடு வளர்ந்தேன். எங்கள் தலைவர்கள் பாகிஸ்தானை ஆரோக்கியமான இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்பினர். ஒரு இளைஞனாக நான் நல்ல அரசு என்றால் என்ன என்று தெரியவில்லை. இங்கிலாந்து சென்ற பிறகுதான் இதை அறிந்தேன். எனக்கு எப்போதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால், நான் பாகிஸ்தானை ஒரு நல்ல வளர்ச்சி நாடாக மாற்றுவேன் என்று முடிவு செய்தேன். இது தான் எனது பார்வை." என்றார்.


சோவியத்துகள் எங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியபோது, ​​போர்க்குணமிக்க சில குழுக்கள் பாகிஸ்தானில் இருந்து விட்டன. அதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம் என்ற வரைப்படம் பாதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அமைதிக்காக வேறொரு நாட்டோடு கூட்டு சேருவோம் என்று முடிவு செய்துள்ளோம். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்களைக் குறைக்க முயற்சித்தோம். ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்களை விரட்ட பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.


பாகிஸ்தான் அரசியல் ரீதியாக உலகின் மிகச் சிறந்த கட்டத்தில் உள்ளது என்று இம்ரான் கூறினார். ஒரு பக்கம் சீனாவும், மறுபுறம் ஈரான். எங்கள் இரண்டாவது பெரிய அண்டை நாடு இந்தியா. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவுடனான எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தியாவுடனான எங்கள் உறவு இயல்பானதும், பாகிஸ்தானின் உண்மையான வளர்ச்சியை உலகம் அறிந்து கொள்ளும் என்றார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.