பாகிஸ்தானின் விநோத சட்டங்கள்; மக்கள் எப்படித் தான் வாழ்கிறார்களோ..!!

பாகிஸ்தானில் உள்ள சில விசித்திரமான சட்டங்களை அறிந்து கொண்டால், அங்குள்ள மக்கள் எப்படித் தான் வாழ்கிறார்களோ என நினைக்கத் தோன்றும்.
புது தில்லி: உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கிற்காக பல சட்டங்கள் உள்ளன. ஆனால் சில நாடுகளில் விசித்திரமான சட்டங்களும் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள சில விசித்திரமான சட்டங்களை அறிந்து கொண்டால், அங்குள்ள மக்கள் எப்படித் தான் வாழ்கிறார்களோ என நினைக்கத் தோன்றும்.
மூன்று வகையான சட்டங்கள்
பாகிஸ்தான் தண்டனைச் சட்டம், ஷரியா சட்டம் மற்றும் ஜிர்கா சட்டம் உள்ளிட்ட மூன்று வகையான சட்டங்கள் பாகிஸ்தானில் உள்ளன. பழங்குடியினர் பகுதிகளில் ஜிர்கா சட்டம் பொருந்தும். இந்த சட்டங்களில் பல விசித்திரமான விதிகள் உள்ளன இந்த சட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் அமல்படுத்த முடியாத சட்டஙக்ள் எனலாம். பாகிஸ்தானின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், அந்த விசித்திரமான சட்டங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
காதலித்தால் தண்டனை
பாகிஸ்தானின் ஹூதூத் சட்டத்தின்படி மேற்கத்திய நாடுகளைப் போல் பெண் தோழிகள் இருக்க முடியாது. திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் வாழ அரசு அனுமதிக்கவில்லை, அதாவது நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பையன் தனது காதலியுடன் சேர்ந்த வாழ்ந்தால், அவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. சில காலத்திற்கு முன்பு சிந்து மாகாணத்தில் ஒரு விசித்திரமான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மக்கள் 18 வயதில் திருமணம் செய்வது கட்டாயமாகும். இது தவிர, இந்த சட்டத்தை மதிக்காதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தடை
உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசப்பட்டு படிக்கப்படும் போது, சில அரபு வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளில் மஸ்ஜித், அல்லாஹ், ருசூல், நபி போன்றவை அடங்கும்.
பிரதமரை விமர்சிக்க தடை
இந்தியா போன்ற அனைத்து நாடுகளிலும் பேச்சு சுதந்திரம் இருந்தாலும், பாகிஸ்தானில் பல விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று பாகிஸ்தான் பிரதமரை கேலி செய்வது. அங்கு எந்த குடிமகனும் தனது பிரதமரை, விமர்சிக்கவோ, கேலி செய்யவோ முடியாது.
ALSO READ | Oldest Pending Case: 221 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு..!!
மீம்களைப் பகிர்ந்தால் அபராதம்
பாகிஸ்தானின் சைபர் கிரைம் சட்டத்தின்படி, சமூக ஊடகங்களில் ஒருவரை கேலி செய்ய மீம்ஸ் போன்றவற்றைப் பகிர முடியாது. அப்படி செய்தால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
கல்விக் கட்டணத்திற்கு வரி
பாகிஸ்தானில் எழுத்தறிவு சதவீதம் மிகக் குறைவாக உள்ளது. ஆனால் கல்வியை மேம்படுத்த எந்த வித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கல்வி கற்பதை மேலும் கடினமாக்கும் நடைமுறை தான அங்கு உள்ளது. பாகிஸ்தானில் ஒரு மாணவர் தனது படிப்புக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால், அதற்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதுவே அங்கு படிப்பவர்கள் குறைவாக இருப்பதற்கான காரணம்.
இஸ்ரேல் செல்ல தடை
பாகிஸ்தான் தனது குடிமக்களை இஸ்ரேலுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. ஏனெனில் பாகிஸ்தான் அரசு இஸ்ரேல் என்பது ஒரு நாடு இல்லை என்று கூறி வருகிறது. அதனால் தான் இஸ்ரேலுக்கு செல்ல அங்குள்ள அரசு விசா தருவதில்லை.
ரம்ஜான் சமயத்தில் வெளியில் சாப்பிட தடை
பாகிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையின் போது, எந்த ஒரு குடிமகனும் பொது இடங்களில் எதையும் சாப்பிட முடியாது. இந்த நேரத்தில் தெரு உணவுகளை பொது இடத்தில் சாப்பிடுவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களின் தொலைபேசியைத் தொடுவதற்கு அனுமதி தேவை
பாகிஸ்தானில், தவறுதலாக வேறொருவரின் தொலைபேசியைத் தொட்டால், அது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. அனுமதியின்றி மற்றொருவரின் போனை தொட்டால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
ALSO READ | Watch Viral Video: படம் எடுத்து ஆடும் நாகப்பாம்பு ஜோடி; இது காதலா; இல்லை ஊடலா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR