பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

தென்னாப்பிரிக்காவில் ஜங்கிள் சஃபாரியில் வனப்பகுதியை ரசிக்க சென்ற நபரின் அந்தரங்க உறுப்பை  பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2021, 11:00 AM IST
  • தென்னாப்பிரிக்காவில் டச்சு குடிமகனுக்கு நேரிட்ட விபத்து.
  • பாதிக்கப்பட்டவருக்கு உடண்டி சிகிச்சை வழங்க இயலவில்லை.
  • அந்தரங்க உறுப்பில் நாகப்பாம்பு தாக்கிய முதல் சம்பவம்.
பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!! title=

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் ஜங்கிள் சஃபாரியில் வனப்பகுதியை ரசிக்க சென்ற நபரின் அந்தரங்க உறுப்பை  பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாம்பு கடிபட்ட உடன் அந்த நபரல் அசையக் கூட முடியாமல் அப்படியே கிடந்தார். அந்த நபரை காப்பாற்ற அந்தரங்க உறுப்பை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. 47 வயதான நெதர்லாந்து குடிமகன் ஒருவர் கழிப்பறையை பயன்படுத்திய போது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.

மூன்று மணி நேரத்திற்கு பிறகு தான் சிகிச்சை

கழிவறையை பயன்படுத்தும் போது நாகப்பாம்பு கடித்ததாகவும்,  அதன் பிறகு சுமார் மூன்று மணி நேரம் அவர் அதே நிலையில் இருந்தார் எனவும் 'மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் அவர் 350 கிமீ தொலைவில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.  ​​அந்த நபரின் அந்தரங்கப் பகுதியில் எரிச்சலும், கடுமையான வலியும் ஆரம்பித்து, அது படிப்படியாக நெஞ்சு பகுதி வரை வலி பரவியது. ஒருவரின் அந்தரங்க உறுப்பை நாகப்பாம்பு தாக்கியது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ | Watch Viral Video: படம் எடுத்து ஆடும் நாகப்பாம்பு ஜோடி; இது காதலா; இல்லை ஊடலா!

அந்தரங்க பகுதியின் நிறம் மாறியது

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவரது அந்தரங்க உறுப்புகள் மற்றும் விதைப்பை முற்றிலும் வீங்கி கரு ஊதா நிறமாக மாறியிருந்தது. பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இது குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், இதற்கு முன் ஒருவரின் அந்தரங்க உறுப்பை நாகப்பாம்பு கடித்த சம்பவம் நடந்ததில்லை எனக் கூறினார்,

அறுவை சிகிச்சை 

தென்னாப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள் பல விஷ பாம்புகளின் தாயகமாகும். சில நேரங்களில் சிறிய கவனக்குறைவு கூட பெரிய பிரச்சனையாக மாறிவிடும். பாம்பு கடியால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்ட நபர் தாமதமாக மருத்துவமனைக்கு வந்த பிறகும் கூட காப்பாற்றப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் அந்தரங்க உறுப்பை சீரமைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

ALSO READ | Viral Video: திருமணத்தில் வேற லெவலில் நடனமாடிய ஜோடி, பாராட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News