மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? ஒரு மருத்துவரின் பகீர் அனுபவம்..!!
இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை, ஆழ்ந்த கோமாவிலிருந்து தப்பிய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா? உடல் இறக்கும் போது ஆன்மாவுக்கு என்ன நடக்கும்? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை அறிய பல நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை, ஆழ்ந்த கோமாவிலிருந்து தப்பிய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வேறொரு உலகத்தை அடையும் ஆன்மா
ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரணத்திற்குப் பின் வாழ்க்கை குறித்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு தீவிர மூளை தொற்றுக்குப் பிறகு கோமா நிலைக்குச் சென்றார். அப்போது, அமானுஷ்ய உலகில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவம்
68 வயதான டாக்டர் Eben Alexander பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். 25 ஆண்டுகால வெற்றிகரமான மருத்துவ பணியில், நரம்பியல் அறுவை சிகிச்சை செய்து நூற்றுக்கணக்கான மக்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளார். இருப்பினும், அவரே மூளை தொடர்பான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மரண படுக்கையில் இருந்து, பின்னர் உயிர் பிழைத்தார்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் எபென் அலெக்சாண்டர் நவம்பர் 10, 2008 அன்று தூங்கி எழுந்தபோது, அவர் தனது உடலில் கடுமையான வலியை உணர்ந்தார். அவரது மனைவி அவருக்கு டீ கொடுக்க வந்தபோது, உடல்வலி இருப்பதாகவும், ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும் கூறினார். அதை அடுத்து அவருக்கு தேநீர் கொடுத்துவிட்டு அவரது மனைவி அங்கிருந்து சென்றார், அதன் பிறகு மருத்துவர் மீண்டும் படுத்துக் கொண்டார். சில மணி நேரங்களுக்குப் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, கணவர் பேச்சி மூச்சின்றி கிடைப்பதை கண்டார்.
மேலும் படிக்க | சவுதி அரேபியாவில் மாற்றத்திற்கான விதை; மெக்காவில் பெண் பாதுகாவலர்
மூளையில் வைரஸ் தொற்று
அவரது நிலையைக் கண்டு பதற்றமடைந்த மனைவி, உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து லிஞ்ச்பர்க் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதே மருத்துவமனையில்தான் அலெக்சாண்டர் கடந்த பல ஆண்டுகளாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, மூளையில் அரிய வகை பாக்டீரியா தொற்று ஈ.கோலி மெனிங்கோஎன்செபாலிடிஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. சில மணி நேரங்களிலேயே இந்த வைரஸ் அவரது மூளையை பாதிக்க ஆரம்பித்தது.
கோமா நிலைக்குச் சென்ற பிறகு உடலை விட்டு ஆன்மா வெளியேறியது
அவரது உடல்நிலை மோசமடைந்ததைக் கண்ட மருத்துவர்கள், உடனடியாக அவரை வென்டிலேட்டரில் வைத்தனர். அங்கு அவர் ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்றார். அலெக்சாண்டர் உயிர் பிழைப்பது மிகவும் அரிது என மருத்துவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 10 சதவீதம் மட்டுமே என்றும், உயிர் பிழைத்தாலும், வாழ்நாள் முழுவதும் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மருத்துவர்கள் கூறினர். அதனால் அவரை மேலும் துன்புறுத்தாமல், அவருக்கான சிகிச்சையை நிறுத்தி விடலாம் என்றும், மரணம் ஒன்று தான் அவருக்கு நிம்மதி அளிக்கும் விஷயம் என குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
மேலும் படிக்க | தப்லிகி ஜமாத் மீது தடை விதித்தது சவுதி அரேபியா
பொய்த்து போன மருத்துவர்களின் கணிப்பு
இந்த மருத்துவர்களின் அறிவுரைக்கு மாறாக, அலெக்சாண்டர் வேறொரு உலகத்திற்கு பயணம் சென்றிருந்தார். கோமாவில் விழுந்து பிறகு மறுபிறவி எடுத்துள்ளதாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அவன் உடம்பில் இருந்த பிடி தளர்ந்து ஆன்மா அதிலிருந்து விடுபட்டது. வெளியே வந்ததும், தான் ஒரு இருண்ட அடித்தளத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்தார், எதையும் பார்க்க முடியவில்லை. அவர் பேச விரும்பினார் ஆனால் பேச முடியவில்லை.
ஆன்மா ஒரு ஒளிரும் கோளம் போல் வளர்ந்தது
இதற்குப் பிறகு அவரது ஆன்மா ஒரு வாயிலைக் கடந்து பெரிய பிரகாசமான வட்டத்தை நோக்கி நகர்ந்தது. அந்த வட்டம் முழுக்க வெளிச்சம், இனிய இசை ஒலித்தது. அந்த ஒளி பந்து நடுவில் இருந்து திடீரென்று வெளிவந்தது. அதன் பிறகு அவர் பசுமையான நிலப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அழகான அருவிகள் ஓடிக்கொண்டிருந்தன. வானத்தில் நீல மேகங்கள் தெரிந்தன. அங்கு விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நடனமாடினர். அங்கே பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அவர் ஒரு வயல்வெளியில் அமர்ந்திருந்தார், அவருக்கு அருகில் ஒரு நீலக்கண் உள்ள பெண்மணி அமர்ந்திருந்தார் என அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருட்டில் தெரிந்த தெய்வீக ஒளிக்கற்றை
அந்தப் பெண் டெலிபதியாக உங்களுக்கு ஏராலமான அன்பு கிடைக்கும் என சொன்னதாக அலெக்சாண்டர் கூறுகிறார். சில கணங்களில், அந்த பார்வை முற்றிலும் மறைந்து, எல்லையற்ற ஆழமும் கருமையும் மாறியது. இந்த முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கிய அந்த ஆழ்ந்த இருளில் ஒரு ஒளிக்கற்றை தெரிந்தது என அவர் கூறுகிறார்.
ஒளியின் நடுவில் 5 முகங்கள்
அலெக்சாண்டர் ஒரு வாரம் ஆழ்ந்த கோமாவில் இருந்த போது, அந்த ஒளிக்கற்றையை அவர் பார்த்துக்கொண்டே இருந்தார். அப்போது அவர் 5 தெய்வீக முகங்களைக் கண்டார். அதில் 4 முகங்கள் நன்கு தெளிவாக தெரிந்தன. மற்றொரு முகம் சரியாக தெரியவில்லை என அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். திடீரென்று கோமாவில் இருந்த மருத்துவர் கண்கள் திறந்து பார்த்ததை கண்ட மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சில மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் முழுமையாக குணம் அடைந்து, சாதாரண வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க | சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கை! ஏமனில் 70 பேர் பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR