கியேவ்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், முக்கிய வங்கிகள் மற்றும் ராணுவம் மீது செவ்வாய்கிழமையன்று சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் நாட்டு அதிகாரிகள் இந்தத் தகவலை தெரிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உக்ரைனில் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் கலாச்சார அமைச்சகங்களின் இணையதளங்கள் உட்பட குறைந்தது 10 இணையதளங்களை முடங்கிப் போவதற்குக் காரணமானது DDoS தாக்குதல். இவற்றைத் தவிர இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளின் இணையதளங்களும் பாதிக்கப்பட்டன.



தொழில்நுட்ப மொழியில், இது 'விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு' (distributed denial-of-service (DDoS) ) தாக்குதல் என்று விவரிக்கப்படுகிறது, அதாவது ஒரு சேவையகத்தை குறிவைத்து இணையத் தரவுகளை நிரப்புவதன் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது, 


இதனால் பொதுவாக உள்வரும் தரவு பாதிக்கப்படும். இந்த தாக்குதலால் உக்ரைனின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் கலாச்சார அமைச்சகங்களின் இணையதளங்கள், வங்கிகளின் தளங்கள் என முக்கியமான பல்வேறு இணையதளங்கள் முடங்கின.  


மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?


இந்த தாக்குதல் எப்படி நடக்கிறது?


இந்த வகை தாக்குதலில், இணையதளத்திற்கு அதிக அளவு 'ஜங்க் டேட்டா' அனுப்பப்படுவதால், இணையதளம் திறக்கப்படுவதில்லை. 


"இந்த DDoS தாக்குதலில் வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை" என்று உக்ரைனின் மூத்த சைபர் பாதுகாப்பு அதிகாரி விக்டர் ஜோரா கூறினார். பேரிடர் மீட்பு குழுக்கள் தாக்குதல் நடத்தியவர்களுடனான தொடர்பை துண்டித்து சேவைகளை மீட்டெடுக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.


தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரேனிய இராணுவம் மற்றும் வங்கிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, நெட்வொர்க் மேலாண்மை நிறுவனமான Kentik Inc. இன் இணைய பகுப்பாய்வு இயக்குனர் டக் மடோரி கூறினார். 


மேலும் படிக்க | உக்ரைனில் உச்சகட்ட பதற்றம்; ரஷ்யாவை மீண்டும் எச்சரிக்கும் அமெரிக்கா.. 


"முதலீட்டாளர்களின் பணத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று உக்ரைனின் தகவல் அமைச்சகத்தின் மூலோபாய தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தத் தாக்குதலால் உக்ரைன் படைகளின் தகவல் தொடர்பு அமைப்பு பாதிக்கப்படவில்லை. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை எதுவும் கூற முடியாது என்றார். இதில் ரஷ்யாவின் கைவரிசை இருக்கலாம் என அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR