Green Funeral Embellishments: இயற்கை அடக்கம் (Green Funeral) இது கேட்பதற்கு சற்று விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால் இந்த வார்த்தை தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுவான வார்த்தையாகவே மாறிவிட்டது. இனி நமது வீட்டு தோட்டங்களில் நம்மை விட்டு பிரிந்தவர்களை உரமாக வைத்து நம்முடனே வளர்க்கலாம். இது எப்படி சாத்தியமாகி இருக்கிறது இந்த தொகுப்பில் பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக ஒரு மனிதன் இறக்கும்போது அந்த உடலை தகனம் செய்வது என்பது வழக்கமான நடைமுறை. அதற்காக எரியூட்டுதல் அல்லது புதைத்தல் போன்ற நடைமுறை காலம் காலமாக செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வழக்கமான நடைமுறையின் போது கார்பன் வெளிப்பாடு என்பது சற்று அதிகமாகவே இருக்கிறது. அது சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு இறந்த மனித உடலை எரிக்கும் போது அதிலிருந்து 573 பவுண்ட் கார்பன் டையாக்சைடு வெளியேறுகிறது.


இது போன்ற கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய நடைமுறை ஒன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இறந்த உடலை இயற்கை உரமாக மாற்ற வழிவகை செய்யப்படுகிறது. இந்த பசுமை இறுதி சடங்கு முறை மக்களிடையே வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த மனித உரமாக்கள் என்பது இறந்த உடலை ஒரு எக்கு பாத்திரத்தில் வைத்து பின்னர் வைக்கோல், மரச் சில்லுகள் மற்றும் குதிரை மசால் போன்ற பொருட்களால் அதை மூட வேண்டும். தொடர்ந்து நுண்ணுயிரிகள் இறந்த சடலத்தையும் தாவர பொருட்களையும் 30 நாட்களுக்குள் சத்துமிக்க மண்ணாக மாற்றி விடுகிறது. பின்னர் மனித உரம் தயாரிக்கும் பணியாளர்கள் 30 நாட்களுக்குப் பிறகு எக்கு பாத்திரத்தில் இருந்து உரத்தை அகற்றி இரண்டு முதல் ஆறு வாரங்கள் வரை அதனை பராமரிக்கின்றனர். தொடர்ந்து அந்த மண் இறந்த நபரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த உரத்தை நாம் பொதுவாக பூச்செடிகள் மரங்களுக்காக பயன்படுத்தப்படும் உரம் போலவே நாம் உபயோகிக்கலாம் இல்லையென்றால் யாருக்காவது அன்பளிப்பாகவும் கொடுக்கலாம்.


மேலும் படிக்க: 2023 எப்படி இருக்கும்... பீதியை உண்டாக்கும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!


சியாட்டிலை தலைமை இடமாகக் கொண்ட மனித உரம் தயாரிக்கும் ரிகம்போஸ் (Recompose) என்ற  நிறுவனம் இணையத்தில் அளித்திருக்கும் தகவலின் படி, ஒவ்வொரு இறந்த மனித உடலும் ஒரு க்யூபிக் கெஜம் உரத்தை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த வகை மனித  உரம் நம் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை இயற்கை உலகிற்கு திருப்பி அனுப்புகிறது மற்றும் “காடுகளை மீட்டெடுக்கிறது, கார்பனைப் பிரித்து புதிய வாழ்க்கையை வளர்க்கிறது” என்று Recompose நிறுவனம் தெரிவித்துள்ளது.


தற்போது இந்த நடைமுறையானது அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டு முதன்முதலாக வாஷிங்டன் நகரில் சட்டபூர்வமாக்கப்பட்டது. பின்னர் 2021ல் கொலராடோ மற்றும் ஓரிகன் மாகாணத்திலும், 2022 வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா மாகாணத்திலும், தற்போது கடந்த சனிக்கிழமை நியூயார்க் மாகாணத்திலும் இது சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் சில மத அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது ஒருமனதாக இந்த சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.


இறந்த உடல்கள் தோட்டம் செடி கொடிகள் வளரக்கூடிய மண்ணாக மாறுவது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. Teraamation எனப்படும் கிரீன் Funeral முறையை ஆதரிப்பவர்கள் இந்த செயல்முறை சிக்கனமானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும் கூறுகிறார்கள்.


மேலும் படிக்க: அடர்ந்த காட்டில் ஒளிந்திருக்கும் தவளை; 10 நொடியில் கண்டுபிடித்தால் கில்லாடி தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ