`Megxit`க்கு பிறகு இளவரசர் ஹாரி தனது மனைவியுடன் அரசக் குடும்பத்துடன் இணையும் காரணம் என்ன?
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் இந்த ஆண்டு அரச குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 12ஆம் நாளன்று லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளான்று நடைபெறும் அணிவகுப்பில் ஹாரி தம்பதிகள் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி: இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் இந்த ஆண்டு அரச குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய உள்ளனர் என்று Sunday Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 12ஆம் நாளன்று லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளான்று நடைபெறும் அணிவகுப்பில் ஹாரி தம்பதிகள் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
ராணியின் 95 வது பிறந்தநாளையொட்டி Trooping of the Colour என்று அழைக்கப்படும் ராணுவ அணிவகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் (Coronavirus) தாக்கத்திற்கு பிறகு ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) முதல் தேசிய கொண்டாட்டமாகவும் இந்த அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த நிகழ்ச்சியில் அரசக் குடும்பத்தினர் யாரும் கலந்துக் கொள்ளவில்லை. தனியாக இந்த அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார் ராணி எலிசபெத்.
தற்போதைய திட்டத்தின்படி, எலிசபெத் ராணியின் (Queen Elizabeth II) பிறந்தநாள் அணிவகுப்பு லண்டனில் இயல்பாக நடைபெற வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்" என்று ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Also Read | ஹாரி & மேகன் மார்கெல் திருமணம் முதல் Megxit வரை
கடந்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபே காமன்வெல்த் சேவையில் 'Megxit’ ஒப்பந்தம் இறுதியானது. அப்போதுதான் அரசக் குடும்பத்தினருடன் ஹாரி மற்றும் மேகன் இருவரும் பொதுநிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றினார்கள். அதன்பிறகு அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி தம்பதியினர் தங்கள் மகன் ஆர்ச்சியுடன் கலிபோர்னியாவில் (California) வசித்து வருகின்றனர்.
ஹாரிக்கு அரச குடும்பத்தினருடனான உறவு சீராக உள்ளது என்று கூறப்படுகிறது. பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், 2021 ஆம் ஆண்டில் ராணியின் (Queen Elizabeth II) 95வது பிறந்தநாள் என்ற மெகா நிகழ்வில் மீண்டும் அரசக் குடும்பத்தினருடன் இணைவார்கள்.
2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதத் தொடக்கத்தில் அரச கடமைகளில் இருந்து ஆறு வார கால விடுப்பை அறிவித்த ஹாரி தம்பதியினர் கிறிஸ்துமஸை (Christmas) தனியாக கொண்டாடினார்கள். வழக்கம்போல் அரச குடும்பத்தினருடன் இணைந்து கிறிஸ்துமஸை அவர்கள் கொண்டாடவில்லை. விடுமுறையில் இருந்து திரும்பிய சில நாட்களில், ராயல் தம்பதிகள் தாங்கள் "நிதி ரீதியாக சுயாதீனமாக" செயல்படுவதாகவும், அரச குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து "பின்வாங்க" முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தனர்.
Also Read | Hi-Tech ஆனது அரச குடும்பம்: Alexa மூலம் வரும் இங்கிலாந்து ராணியின் Christmas wish
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR