அஷ்ரப் கானி ஆப்கானை விட்டு ஓடியதன் காரணம் என்ன; அவரது சகோதரரின் முக்கிய பேட்டி..!!
அஷ்ரப் கானியின் சகோதரர் ஹஷ்மத் கானி ஜீ நியூஸின் ஆங்கில சேனலான WION உடன் பேசுகையில், தலிபான், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் பற்றிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானை தலிபான் கைபற்றிய பிறகு, காபூலில் நிலைமை மோசமடைந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில், முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் சகோதரர் ஹஷ்மத் கானி, ஜீ நியூஸை சேர்ந்த ஆங்கில சேனலான WION உடன் பேசினார். தாலிபான், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறினார். மேலும், தனது சகோதரர் அஷ்ரப் கானி ஏன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார் என்றும் கூறினார்.
ஹஷ்மத் கானி தாலிபான்களை ஆதரிக்கிறாரா?
ஹஷ்மத் கானி, 'இது தவறான கருத்து. நான் அவர்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டேன் என்பது உண்மை தான், அவர்கள் ஆட்சியை ஆப்கான் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். நான் ஒரு இரத்த கிளரியான போராட்டத்தை தவிர்ப்பதற்கான விதியை நான் ஏற்றுக்கொண்டேன். நான் எனது இனம், கல்வி மற்றும் வணிகத் துறையின் பாதுகாப்பிற்காக இங்கு வாழ்கிறேன். அவர்களுக்கு என்னால் பாதுகாப்பை தர முடியும் என அவர்களிடம் சொன்னேன்.
ஆனால், கடந்த சில நாட்களில் அவர் தனக்கு மூளை இல்லை என்பதை நிரூபிப்பது போல் நடந்து கொண்டார். நாட்டை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை. நாட்டில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசாங்கம் உருவாகும் நிலை ஏற்படும் போது, அதை தவிர்க்க முடியாது. புதிய ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முயற்சிப்பது தான் நல்லது என்பது எனது நிலைப்பாடு, அதனால் நாடு சரிவை எதிர்கொள்ளாமல் தப்பக் கூடும்.
ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!
காபூலின் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது, நீங்கள் முன்னேற்றம் எதையேனும் காண்கிறீர்களா?
காபூலின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த, ஹஷ்மத் கானி, 'பாதுகாப்பைப் பொறுத்தவரை, நன்றாகவே உள்ளது. ஒரே பிரச்சனை அவர்களுக்கும் (தலிபான்களுக்கும்) அமெரிக்க துருப்புக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மட்டுமே. அமெரிக்க வீரர்கள் கவுரவத்துடன் அனுப்பபட வேண்டும் என்பது தான். அப்போது யாரும் கொல்லப்படாமல், யாரும் அவமதிக்கப்படாமல் இருக்கும் வகையில் செயல்பட வேண்டும். பணவீக்கம் குறித்து, அவர் மேலும் கூறுகையில், 'பணவீக்கத்தைப் பொறுத்தவரையில், வங்கித் துறை பற்றாக்குறை மற்றும் அமெரிக்கா தேசிய இருப்புக்களை முடக்கியதால், எல்லாவற்றின் விலைகளும் தொடர்ந்து அதிகரிக்கிறது.' என்றார்.
அமெரிக்கன் அல்லது தாலிபான், நீங்கள் யாரை முன்மொழிந்தீர்கள்?
ஹஷ்மத் கானி கூறினார், ' என் மக்களை தனியாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும். நான் அந்த பகுதியை கைப்பற்றி உண்மையில் விசா உள்ளவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். குழப்பத்தை உருவாக்க வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். '
இந்தியாவையும் தலிபான்களையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் பங்கை எப்படி பார்க்கிறீர்கள்?
ஹஷ்மத் கானி கூறினார், 'ஆப்கானில் பாகிஸ்தான் செல்வாக்கு வலுவான உள்ளது, அதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா ஒன்று கூறாமல் இருப்பது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. ஏற்றுமதிக்காக அமைக்கப்பட்ட விமான சரக்கு வழித்தடங்கள் ஆப்கானிய பழங்களுக்கு மிகவும் பயனளிக்கும் பாதைகளில் ஒன்றாகும். தூதரகங்கள் இருக்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் தங்கள் தூதரகங்களை ஆப்கானில் வைத்திருக்க வேண்டும், இதனால் ஆப்கானிஸ்தான் எந்த நாட்டிற்கும் எதிராக பயன்படுத்தப்படுவதாக கூரப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், நாங்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உலகம் உணரும்.
ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்
உங்கள் சகோதரர் அஷ்ரப் கானியுடன் நீங்கள் உரையாடியிருக்கிறீர்களா, அவர் ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்?
ஹஷ்மத் கானி, 'ஒரு சதி இருந்தது, அரசியல் குறித்து அவர் விளக்கங்களை அளிப்பார் என்று நான் நம்புகிறேன். தாலிபான்கள் நிச்சயமாக அஷ்ரத் கானியை கொன்று குழப்பத்தை உருவாக்க விரும்பினர். அவர் (அஷ்ரப் கானி) காபூலை விட்டு வெளியேறியதன் மூலம் ஒரு இரத்தக்களரியை நிறுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ALSO READ | "இந்தியா சொர்க்க பூமி”: இந்தியாவிற்கு அகதியாக வந்துள்ள ஆப்கான் பெண்மணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR