USSR எனப்படும் சோவியத் யூனியன் 1917 ஆண்டில் உதயமானது. ரஷ்ய புரட்சிக்கு பிறகு ரஷிய எல்லைகள் நிறுவப்பட்டு, 15 நாடுகள் அதில் அங்கம் வகித்து, உலகின் வல்லரசுகளில் ஒன்றாக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1991 சோவியத் யூனியன் உடைந்து, அதிலிருந்த நாடுகள் அனைத்தும் பிரிந்தன.


அதில் இருந்த இரண்டும் நாடுகள் தான் அர்மீனியா மற்றும் அஜர்பைஜான். இந்த நாடுகள் பிரிந்து தனித்தனி நாடுகளாக உருவாகின. 


இதில் அர்மீனியாவில் கிறிஸ்துவ மதத்தை சேர்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அஜர்பைஜான் நாட்டில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர். இதில் அஜர்பைஜான் நாடு எண்ணைய் வளம் மிக்க நாடு. 


இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற மலைப்பகுதி தான் பிரச்சனைக்கு காரணம். இந்த  நகோர்னோ-கராபக் என்ற மலைப் பகுதியின் பரப்பளவு 4400 சதுர கிலோமீட்டர். இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான காஷ்மீர் பிரச்சனை போன்றது.  


இரு நாடுகளும் இடையிலான இந்த சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், 1988ம் ஆண்டு முதலே, அதாவது சோவியத் யூனியன் உடையும் முன்னரே, மோதல் நடைபெற்று வருகிறது. 1994ஆம் ஆண்டு இந்த சண்டை முடிவுக்கு வந்தது.


ALSO READ | நான்காம் நாளாக தொடரும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரும், 'மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?' என்ற அச்சமும்...


இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், லட்ச கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர்.


1994ஆம் ஆண்டு இந்த சண்டை முடிவுக்கு வந்ததாலும் 2016 ஆம் ஆண்டு முதலே, இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.


அஜர் பைஜானுடன் துருக்கி நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ரஷ்யா அர்மீனியாவுடன் நெருகிய உறவை கொண்டுள்ளது. ரஷியாவின் ராணுவ தளம் அர்மீனியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


நாகோர்னோ - காராபாக் எனும் மலைப்பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாட நினைப்பது தான் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல், சமீபத்திய இந்த போர் சூழலுக்கான காரணம்.


அஜர்பைஜானுக்கு துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை ஆதரவு அக்ரம் நீட்டியுள்ள நிலையில், அர்மீயவிற்கு ரஷ்யா ஆதராவாக உள்ளது.


இருநாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஐநா கோரிக்கை வைத்துள்ளது. இரு நாடுகள் இடையேயான போர் பதற்றத்தைத் தணிப்பதற்கு அமெரிக்கா முன்வருவதாக அதன் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


ALSO READ | Kim Jong Un: புலி பதுங்கியது எதற்கு? “Sorry" -க்கு பின்னால் உள்ள மர்மம் என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR