புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில நாட்களே உள்ள நிலையில்,  தனக்கு எதிராக இரண்டு முறை கண்டன தீர்மானத்தை எதிர் கொண்ட முதல் அமெரிக்க அதிபராகியுள்ளார். ட்ரம்பின் பதவிக்காலம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாக  இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன்பாக 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்க அதிபர் டிரம்பை (Donald Trump)  பதவி நீக்க கோரும் கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


டிரம்ப்  தனது ஆதரவாளர்களை தூண்டி, காபிடோல்  ஹில் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.


இன்று கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற கூடிய சபையில், ஜனநாயகக் கட்சியினரும் 10 குடியரசுக் கட்சியினரும்  கண்டன தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை செனட், விசாரணையைத் தொடங்காது என கூறப்படுகிறது. 


விசாரணை எவ்வாறு தொடரும் என்பதும், செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியினர் டிரம்பிற்கு எதிராக வாக்களிப்பார்களா என்பதும் தெளிவாக இல்லை. 
அடுத்து என்ன நடக்கலாம்....


செனட்டின் அடுத்த கூட்டம் ஜனவரி 19 அன்று கூடும். செனட்டில், தற்போது செனட்டின் தலைவராக உள்ள குடியரசுக் கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கானலின் கடைசி நாளாக இது இருக்கலாம். துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்றதும், அவரை செனட்டின் தலைவராக்கியதும், விசாரணையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படலாம்.


அமெரிக்க அதிபருக்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றபட்ட உடன், அது பின்னர் செனட் சபைக்கு கொண்டு செல்லப்படும். அதிபரை பதவியில் இருந்து நீக்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை.டிரம்ப பதவி விலகும் வரை,  செனட்டில் விசாரணை நடக்க வாய்ப்பு ஏதும் இல்லை. 


அதற்கு பின் விசாரணை நடந்து, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 1958 முன்னாள் அதிபர்கள் சட்டத்தின் கீழ் தனது சில சலுகைகளை இழக்க நேரிடும். அவற்றில் வாழ்நாள் ஓய்வூதியம், வருடாந்திர பயண  சலுகை,  அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கான நிதி ஆகியவை அடங்கும். டிரம்பிற்கு இன்னும் இரகசிய சேவை பாதுகாப்பு உண்டு. டிரம்ப் இந்த சலுகையையும் இழப்பாரா என்பதை  அதற்காக கொண்டு வரப்படும் சட்டத்தை பொறுத்தது. நாடாளுமன்றம் சட்ட திருத்தத்திற்கு ஓப்புதல் அளித்தால், இந்த சலுகையையும் அவர் இழப்பார். 


ஜனவரி 6, 2021 அன்று கேபிடல் ஹில் வன்முறைக்கு டிரம்ப காரணம் என கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானத்தில், ட்ரம்பின் குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் 222 ஜனநாயகக் கட்சியினர் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.  232-197 என்ற வாக்கு எண்ணிக்கையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ALSO READ | இரண்டு முறை கண்டனத் தீர்மானங்களை எதிர்கொண்ட அதிபர் Trump பதவி நீக்கப்படுவாரா?