அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது சென்ற வியாழக்கிழமை இரவு உறுதியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர், அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


ட்ரம்ப் சிகிச்சைக்கு பிறகு நல்ல உடல் நிலையில் இருக்கிறார். மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது  கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்


இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை முதல் பொது நிகழ்வுகளை மீண்டும் பங்கேற்க தொடங்கலாம் என வெள்ளை மாளிகை மருத்துவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். 


வியாழக்கிழமை, அமெரிக்க அதிபர், கோவிட் -19, அதாவது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இப்போது அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என கூறினர். 


ALSO READ | ஐநாவில் பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்த இந்தியா..!!!


டிரம்பின் மருத்துவர் ஒரு அறிக்கையில், " கடந்த வியாழக்கிழமை ட்ரம்பிற்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதிலிருந்து வரும் சனிக்கிழமை  முதல் 10 வது நாள் ஆகும்.  மருத்துவ குழு அவருக்கு சிறப்பாக சிகிச்சை அளித்துள்ளது. அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.  அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளார்” எனக் கூறினார். அதிபர் டிரம்ப் சில நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு, திங்கள்கிழமை மாலை வெள்ளை மாளிகைக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


நவம்பர் 3 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் இரு மாதத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், அதிபர் தனது பேரணிகளை நடத்துவதில் ஆர்வமாக உள்ளார். 


தேர்தல் கருத்துக் கணிப்பில், ட்ரம்ப் தான் மீண்டும் வெற்றி பெறுவார் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G