புதுடெல்லி: ஈரானுக்கு விசா இன்றி இந்தியர்கள் செல்லலாம் என்றும், பாஸ்போர்ட் இருந்தால் போதும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த விசா இல்லா பயணத்தில் அதிகபட்சம் 15 நாட்கள் வரை இந்தியர்கள் ஈரானில் தங்கலாம். பிப்ரவரி 4 முதல் நடைமுறைக்கு வரும் இந்த விசா விலக்குக்கு 4 நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது. முதலில் இந்திய குடிமக்களுக்கான விசாவை ஈரான் அரசு ரத்து செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசா நடைமுறை ரத்து


ஈரான் அரசு மேற்கொள்ள பயண விதிமுறை திருத்தத்தின்படி, இந்தியப் பயணிகள் விமானம் மூலம் மட்டுமே ஈரானுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது, அங்கு அதிகபட்சம் 15 நாட்கள் தங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆறு முறைக்கு ஒரு முறை அனுமதி


அதேபோல, சாதாரண கடவுச்சீட்டை வைத்திருக்கும் இந்தியர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விசா இன்றி ஈரானுக்கு செல்ல  அனுமதிக்கப்படுவார்கள், அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம் என்ற விதிமுறையின்படி, அதற்கு அதிகமாக தங்க முடியாது. 15 நாள் என்ற காலத்தை நீட்டிக்க முடியாது என்று ஈரான் அரசு அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.


மேலும் படிக்க | வெளிநாடு  டூர் செல்ல பிளானா.. ‘இந்த’ நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை!


சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வேண்டாம்


சுற்றுலா நோக்கங்களுக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு மட்டுமே விசா தள்ளுபடி என்ற விதிமுறை பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


15 நாட்களுக்கு மேல் தங்க முடியாது


ஈரானுக்கு செல்லும் இந்திய குடிமக்கள் அங்கு 15 நாட்களைவிட அதிக காலம் தங்க விரும்பினாலோ அல்லது ஆறு மாத காலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்ல விரும்பினாலும் அவர்கள் இந்தியாவில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிரதிநிதிகள் மூலம் தேவையான விசாவைப் பெற வேண்டும்.


அதேபோல, சுற்றுலாவைத் தவிர வேறு நோக்கங்களுக்காக செல்பவர்கள், வேறு வகையான விசாக்களுக்காக இந்தியாவில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தை அணுகவேண்டும். ஈரான் அரசு அறிவித்துள்ள் விசா விலக்கு, வான் எல்லை வழியாக ஈரானுக்குச் செல்லும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தாய்லாந்து, இலங்கை, மலேசியா, நேபாளம், இந்தோனேஷியா உட்பட 11 நாடுகளுக்கு இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவுக்கு அனுமதி உண்டு.


மேலும் படிக்க | US Visa: ஆன்லைனில் அமெரிக்க விசா ரெனியூவல்! அருமையான வாய்ப்பை தவறவிடவேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ