சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோ பைடன் (Joe Biden) வெற்றியை உறுதிபடுத்த ஜனவரி 6, 2021 அன்று பிரநிதிநிதிகள் டசபை கூட உள்ள நிலையில், கேபிடல் ஹில் வளாகத்தில் கூடிய டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 
டிரம்ப்  தனது ஆதரவாளர்களை தூண்டி, காபிடோல்  ஹில் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.  இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இதை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், டிரம்ப்பிற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிவிட்டர் நிறுவனமும் அவரது கணக்கை முடக்கியது.


இரு நாட்களுக்கு முன், செனட்டின் மேல் சபையில் டிரம்ப் மீதான விசாரணை டிரம்ப். இந்த விசாரணையில் டிரம்ப் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் குழு ஒன்று கலந்துகொண்டது. டிரம்ப் தற்போது அதிபர் பதவியில் இல்லாத நிலையில் இந்த தீர்மானம் பேச்சுரிமைக்கு எதிராக இருப்பதோடு, அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது என டிரம்ப் சார்பகா ஆஜரான வழக்கறிஞர்கள் தன் வாதத்தை முன் வைத்துள்ளனர்.


இந்நிலையில், ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், டிவிட்டரை பயன்படுத்ஹ டொனால்ட் டிரம்பிற்கு ஒரு போது அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்.


ஜனவரி 6 ம் தேதி அமெரிக்க கேபிடல் வன்முறையைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் அவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000 க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு தடை விதித்திருந்தது.


ALSO READ | டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெறுமா.. அரசியல் வல்லுநர்கள் கூறுவது என்ன..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR