உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். அதேபோல அவரும் தனது சமூக ஊடகங்களில் பல விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசுவார். நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்கின் இந்த விளக்கம் பலனளிக்குமா என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர். கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடனான விவகாரம் குறித்த செய்திக்கு பதிலளித்த எலோன் மஸ்க் தனது பாலியல் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தான் பல காலமாக பாலியல் உறவு கொள்ளவில்லை என்று எலோன் மஸ்க் விளக்கமளித்துள்ளார். அதை அவர் தனது டிவிட்டர் செய்தியில் பதிவிட்டுள்ளார்.



இதனுடன், நிக்கோல் ஷனாஹனுடனான விவகாரம் குறித்த செய்தியை மறுத்த அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் இருவரும் இரண்டு முறை மட்டுமே சந்தித்ததாகக் கூறினார்.


மேலும் படிக்க | 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.54,50,67,53,50,000 இழந்தார் எலோன் மஸ்க்


கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனாஹனுடன் எலோன் மஸ்க், திருமணம் தாண்டிய உறவு வைத்துள்ளதாக வதந்திகள் வெளியாகின. சில மாதங்களுக்கு முன்பு, செர்ஜி பிரின் தனது மனைவி நிக்கோல் ஷானஹானிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.


அதற்கு காரணம், தனது மனைவி மற்றும் எலோன் மஸ்க்கின் விவகாரம் குறித்து செர்ஜிக்கு தெரியவந்ததால் தான் இந்த விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையின் தெரிவித்துள்ளது.  


தி வால் ஸ்டீர்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ”2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மியாமி நகரில் ஆர்ட் பேஸல் என்ற நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிமிருந்தும் கோடீஸ்வரர்கள் பங்கேற்றார்கள். அதில் எலோன் மஸ்குக்கும், நிகோலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இது செர்ஜி பிரினுக்குத் தெரியவந்த நிலையில், பிரினிடம் மஸ்க் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்டு தப்பித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன'' என தெரிவித்திருக்கிறது. இந்தச் செய்தி சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியது.


இதையடுத்து, நிக்கோலின் விவகாரம் குறித்து எலோன் மஸ்க் தெளிவுபடுத்தினார்.



'இது முழு முட்டாள்தனம். செர்ஜியும் நானும் நண்பர்கள், நேற்று இரவு ஒரு விருந்தில் ஒன்றாக இருந்தோம்! கடந்த 3 ஆண்டுகளில், நிக்கோல் 2 முறை மட்டுமே சந்தித்துள்ளார், இரண்டு முறையும் பலர் எங்களுடன் இருந்தனர். எங்களிடயே காதல் எதுவும் இல்லை' என்று எலோன் மஸ்க் தனது காதல் வாழ்க்கையைப் பற்றி தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | எலான் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்


எலோன் மஸ்க்கின் விளக்கத்திற்குப் பிறகு, இந்த விவகாரத்தின் அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட ட்விட்டர் பயனர், 'கேட்டதில் மகிழ்ச்சி' என்று எழுதினார். இதற்குப் பிறகு எலோன் மஸ்க் மீண்டும் பதிலளித்து, 'நான் நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை' என்று எழுதினார்.


கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் எலோன் மஸ்க்குக்கு இடையிலான நீண்ட கால நட்பு, நிக்கோல் ஷனாஹனுடனான விவகாரத்திற்குப் பிறகு முறிந்தது. செரின் பிரின் 2008 இல் மஸ்க்கின் நிறுவனத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது காப்பாற்றினார் என்பதும், பொருளாதார நெருக்கடியின் போது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவில் முதலீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உங்கள் வீட்டு நாயை பராமரிக்க காவலர் வேண்டுமா ? ஆர்டர்லி முறைக்கு நீதிபதி சரமாரிக் கேள்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ