Twitter: பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வருமானத்தில் சரிவு

ட்விட்டர்  பயனர்கள் அதிகரித்துள்ள போதிலும், வருவாய் குறைந்து வருகிறது. ட்விட்டர் மஸ்க் ஒப்பந்தத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2022, 02:50 PM IST
  • ட்விட்டர் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை ட்விட்டர் நிறுவனம் வழங்கவில்லை.
  • ட்விட்டர் மஸ்க் ஒப்பந்தத்தின் நிச்சயமற்ற தன்மை.
Twitter: பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வருமானத்தில் சரிவு title=

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அந்த நிறுவனத்தின் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவன பங்குகளை, ஒரு பங்கிற்கு  54.20 டாலர் என்ற அளவில், ஒட்டுமொத்தமாக 4400 கோடிக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தமும் கையொப்பமானது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை, அதனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அதிரடியாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது தொடர்பாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகமான ட்விட்டரில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு 2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பதிவாகியுள்ளது. இந்த சரிவு தொழில்துறை ஆய்வாளர்களின் மதிப்பீடு செய்ததை விட அதிகமாக உள்ளது. சமூக ஊடக நிறுவனம் ஏப்ரல் - ஜூன் 2022 காலாண்டில் $270 மில்லியன் அல்லது ஒரு பங்குக்கு எட்டு சதவீதத்தை இழந்துள்ளது என FactSet மதிப்பீடு கூறுகிறது. 

மேலும் படிக்க | டிவிட்டர் வாங்குவது தொடர்பான வழக்கில் எலான் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

எலோன் மஸ்க் - ட்விட்டர் இடையிலான ஒப்பந்தம் காரணமாக, பங்குகளின் மதிப்பு 14 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் காரணமாக விளம்பரச் செலவுகளைக் நிறுவனம் குறைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் மஸ்க் ஒப்பந்தத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் தினசரி செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 16.6 சதவீதம் அதிகரித்து 23.78 மில்லியனாக அதிகரித்துள்ளது. எனினும், ட்விட்டரின் காலாண்டு வருவாய் பெரிதும் குறைந்துள்ளது.

எலோன் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், அவரும் இப்போது சிக்கலில் இருக்கிறார். எலான் மாஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு, சமூக ஊடக நிறுவனம் டெலாவேர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கு அக்டோபரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியது.

மேலும் படிக்க | எலான் மஸ்கின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதா... உண்மை என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News