ஹாங்காங்: இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு வைரம், 453 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($57 மில்லியன்) விற்கப்பட்டது. இந்த வைரத்தில் காரட் விலையானது, இதுவரை எந்தவொரு ஏலத்திலும் விற்கப்பட்ட வைரத்திற்கான காரட் அளவிலான அதிகபட்ச விலையாகும். 11.15 காரட் கொண்ட வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் விற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஹாங்காங் ஏலத்தில் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் 57 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது, சர்வதேச அளவில் பேசப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1953 ஆம் ஆண்டில் கார்டியரின் ஃபிரடெரிக் மியூ வடிவமைத்த இந்த வைர நகை, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மிகவும் விருப்பமான நகைகளில் ஒன்று ஆகும். தனது வெள்ளி விழா கொண்டாட்டங்கள் உட்பட பல சந்தர்ப்பங்களில் மகாராணி இரண்டாம் எலிசபெத் இந்த நகையை அணிந்திருந்தார்.



 
இந்த இளஞ்சிவப்பு" வைரமானது 453 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($57 மில்லியன்) விற்கப்பட்டது, அதன் மதிப்பிடப்பட்ட விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.11.15 காரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரத்தை வாங்கியவர், தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. 


மேலும் படிக்க | அதிசயம், ஆனால் உண்மை! காற்றில் உள்ள கார்பனில் இருந்து தயாரிக்கப்பட்ட வைரம்


இந்த ஆபரணம், குஷன் வடிவ இரண்டு பெரிய இளஞ்சிவப்பு வைரங்களால் உருவாக்கப்பட்டது. அவற்றில் ஒன்று 59.60 காரட் கொண்டதாகும். வில்லியம்சன் ஸ்டோன், 23.60 காரட் வைரம் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது.  


இளஞ்சிவப்பு வைரங்கள் மிகவும் அரிதானவை, அவை எப்படி இளஞ்சிவப்பு நிறமாக மாறும் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 1953 ஆம் ஆண்டில், கார்டியரின் ஃபிரடெரிக் மியூவால் வடிவமைக்கப்பட்ட மலர் வடிவ ப்ரூச் வைர நகை பார்க்கவே பரவசத்தைக் கொடுக்கிறது. 


Sotheby's Asiaவின் நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களின் தலைவரான Wenhao Yu இளஞ்சிவப்பு நிற வைரங்களைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா?


மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் யாரிடம் செல்லும்?


"எந்த அளவிலும் ஒரு ரத்தினத் தரமான இளஞ்சிவப்பு வைரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்” எனவே இதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது என்று சோத்பி ஏசியாவின் தலைவர் தெரிவித்ததாக The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது.


ஆர்கைல் என்பது மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்கில் உள்ள ஒரு வைரச் சுரங்கமாகும், அரிய வகை வைரங்கள் இங்கு கிடைத்து வந்தன. இந்த சுரங்கம் 37 வருட செயல்பாட்டிற்குப் பிறகு 2020 இல் மூடப்பட்டது. இனி இளஞ்சிவப்பு நிற வைரங்கள் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.


மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ