கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!

சுக்கிரன் கிரகம் ஆடம்பரமான வாழ்க்கை, அதிக அளவிலான பணம், காதல் வாழ்க்கை, இன்பான வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், நிதி நெருக்கடியால் அவதிப்பட நேரிடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 14, 2022, 05:50 PM IST
  • தொழில், வியாபாரம் செழிக்கும்.
  • பணியில் இருப்பவர்கள் மேலதிகாரியிடம் நன்மதிப்பை பெறுவார்கள்.
  • புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்! title=

ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு மிக முக்கிய இடம் உண்டு. வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும் போது, அவனுக்கு சுக்ர தசை தான் அடிக்கிறது என பெரியவர்கள் கூறுவதை கேட்டிருக்க கூடும். சுக்கிரன் கிரகம் ஆடம்பரமான வாழ்க்கை, அதிக அளவிலான பணம், காதல் வாழ்க்கை, இன்பான வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், நிதி நெருக்கடியால் அவதிப்பட நேரிடும். சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​செல்வம், புகழ், மதிப்பு, மரியாதை என அனைத்தும் வந்து சேருவதைக் காணலாம். 

சுக்கிரன் கிரகம் செப்டம்பர் 24 ஆம் தேதி, சுக்கிரன் கன்னியில் நுழைகிறார். புதனும் சூரியனும் ஏற்கனவே கன்னி ராசியில் அமர்ந்துள்ளனர்.  எனவே கன்னி ராசியில் புதன், சூரியன், சுக்கிரன் இணைந்து, மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் வருவதால் திரிகிரஹி யோககிறது உருவாகும். பல ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பெரும் அதிர்ஷ்டமாக அமையும்.

சுக்ரன் - புதன் - சூரியன் இணைவினால் சுப பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்:

மிதுனம்:

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு  சிறப்பான பலன்கள் கிடைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் முக்கிய இடத்தைப் பெறுவார்கள். எல்லோரும் அவரை மதிப்பார்கள். பெயரும் புகழும் கிடைக்கும். இது தவிர பணம் முதலிய பிரச்சனைகள் தீரும்.

தனுசு: 

கன்னி ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு  தொழில், வியாபாரம் செழிக்கும். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரியிடம் நன்மதிப்பை பெறுவார்கள். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த யோகம் இவர்களுக்கு மிகவும் சிறந்த சுப பலன்களைத் தரும். 

மேலும் படிக்க | சிம்ம ராசியில் சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’; இந்த ராசிகளுக்கு குபேர யோகம்!

கும்பம்:

சுக்கிரனின் சஞ்சாரம் கும்ப ராசியினருக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் செல்வச் செழிப்புக்கு வழி காட்டுகிறார். எனவே, அவர்களுக்கு புதிய வருமானத்திற்கான வழிகள் ஏற்படும். திடீர் பண ஆதாயமும் கிடைக்கும். இதைத் தவிர, கூட்டாண்மை தொழிலில் இருப்பவர்கள் மிகவும் பயனடைவார்கள். பணியில் இருப்பவர்களுக்கு கடின உழைப்புக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பெரிய அளவில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. இவர்களின் வாழ்க்கை வழக்கம் போல் இருக்கும். 

மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News