அணு ஆயுதப் போரால் உலகை அடிக்கடி அச்சுறுத்தும் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், புத்தாண்டு 2023 அன்று எடுத்துள்ள உறுதி மொழிகள் உலகை கலக்கமடைய செய்துள்ளன.  உலக இராஜதந்திர வல்லுநர்கள் இதை கிம் ஜாங் உன்னின் ஆபத்தான Wish List 2023 என்று அழைக்கின்றனர். வடகொரியா இதுவரை ஏவிய ஏவுகணைகளில் நான்கில் ஒரு பங்கு 2022 ஆம் ஆண்டு ஏவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிம் எடுத்துள்ள உறுதிமொழி


வடகொரியா புத்தாண்டில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வட கொரியா ஒரு அணுசக்தி நாடாக மாறிவிட்டது. 2022 ஆம் ஆண்டில், கிம் தனது ஆயுதங்களை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றார். இந்த பணி தென் கொரியாவை மனதில் வைத்து உருவாக்கிய குறுகிய தூர ஏவுகணைகளை மேம்படுத்துவதில் தொடங்கியது. பின்னர் ஜப்பானை குறிவைத்து அதிநவீன நடுத்தர தூர ஏவுகணைகளை தயாரித்தார். 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வட கொரியா அதன் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) வெற்றிகரமாக சோதித்தது. 'ஹ்வாசாங் 17' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, அமெரிக்காவின் எந்த இலக்கையும் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.


கிம்மின் அணுசக்தி கொள்கையும் உலகளாவிய நெருக்கடியும்


அணு ஆயுத பயன்பாடு தொடர்பான தனது கொள்கையை கிம் ஜாங் உன் மாற்றிக் கொண்டது உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி நாடான பிறகு வடகொரியாவின் இந்த நிலையை மாற்ற முடியாது என்று கிம் கூறியுள்ளார். அதாவது, தனது அணு ஆயுதங்களை ஒழிப்பதற்குப் பதிலாக, அவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம் என்று கிம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த அணு ஆயுதங்கள் போரை நிறுத்துவதற்காக அல்ல, போரைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் சர்வாதிகாரி அறிவித்துள்ளார். Kim's Wish List (2023) பட்டியலில் உள்ள விஷயங்களின் முன்னுரிமைகளைப் பற்றி பேசுகையில், இந்த பட்டியலில் அணு ஆயுதங்களின் உற்பத்தியை பெரிய அளவில் அதிகரிக்கும் திட்டங்களை உள்ளடக்கியது.


மேலும் படிக்க | கொடூர விபத்து! விமான இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்!


நுட்பமான அணு ஆயுதங்கள்


தென் கொரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய சிறிய மற்றும் நுட்பமானஅணு ஆயுதங்களை பெருமளவில் உற்பத்தி செய்வதும் இதில் அடங்கும் என்று கிம் ஜாங் உன் கூறினார். நுட்பமான அணு ஆயுதங்களை தயாரிக்க, வடகொரியா முதலில் சிறிய ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய சிறிய அணுகுண்டுகளை தயாரிக்க வேண்டும்.


புத்தாண்டில் கிம் வெளியிட்டுள்ள தீர்மானம்


கிம் ஜாங் உன்னின் புத்தாண்டு தீர்மானம் 2023 இல் உளவு செயற்கைக்கோளும் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்வெளியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுவும் என்று கிம் கூறியிருக்கிறார். இந்த பட்டியலில் திட எரிபொருள் பொருத்தப்பட்ட மற்றும் முன்பை விட அதிக சக்தி வாய்ந்த ICBMகளும் அடங்கும். இது அமெரிக்காவையும் குறிவைக்க முடியும். அதே சமயம், வடகொரியாவின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, முந்தைய ஏவுகணையை விடவும் கொடியதாக இருக்கும் என்று தென் கொரிய நிபுணர்கள் கூறுகின்றனர்.


கொரிய தீபகற்பம் உறுதியற்ற தன்மையை நோக்கி செல்கிறது


கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக வடகொரியா தனது எல்லைக்கு அருகே ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டதாக தென் கொரியா சமீபத்தில் குற்றம் சாட்டியது. இவ்வாறான நிலையில் கொரிய தீபகற்ப ஸ்திரமின்மை நிலையற்ற தன்மையை நோக்கி நகரும் விதம் சுற்றுவட்டார பகுதிகளின் அமைதியை பாதிக்கலாம்.


மேலும் படிக்க | IT Tax Returns: வருமான வரியை தாக்கல் செய்யவில்லையா? இந்த பாதிப்புகள் வரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ