உயிர்பலி வாங்கிய மூட நம்பிக்கை! மாந்திரீகம் செய்யவில்லை என நிரூபிக்க முயன்ற 50 பேர் மரணம்!
Witchcraft in Angola took 50 lives : மாந்திரீகத்திற்கு எதிராக எந்தச் சட்டமும் இல்லாத நாடான அங்கோலாவில் மாந்திரீகர்கள் இல்லை என்பதை நிரூபிக்க மந்திர நீரைக் குடித்த 50 பேர் பலி...
Religious beliefs and practices : மூட நம்பிக்கைகள் வாழ்க்கையில் நிம்மதியை மட்டும் கெடுப்பதில்லை, உயிரையும் பறிக்கிறது என்பதற்கு அண்மை உதாரணமாக அங்கோலாவில் 50 பேர் உயிரிழந்த சம்பவம், உலகையே உலுக்கியிருக்கிறது. ஒரு மாந்திரீக சடங்கில் பங்கேற்ற 50 பேர் உயிரிழந்த கொடுமை உலகின் முன் வெளிவந்துள்ளது.
அங்கோலாவில் உயிர்பலி வாங்கிய மாந்திரீகம்
அங்கோலாவில் மூலிகை மருந்து குடித்த 50 பேர் உயிரிழந்தனர். இவர்கள் மாந்திரீகம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க தீர்த்தத்தைக் குடித்தபோது உயிரிழந்தனர். அங்கோலாவின் ஒரு பிரிவினரின் நம்பிக்கைகளின்படி, மாந்திரீகம் செய்யாதவர்கள், அந்த தீர்த்தத்தைக் குடித்தால் உயிருடன் இருப்பார்கள். ஆனால், மாந்திரீகவாதிகள் உயிரிழப்பார்கள்.
தற்போது, அந்த நம்பிக்கையின்படி, உயிரிழந்த 50 பேரும் தவறு செய்தவர்கள். உண்மையில், அந்த தீர்த்தம் என்பது, விஷ மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது என அங்கோலா நாட்டு அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது இந்த செய்தி சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
உண்மையில் அவரவர் மத நம்பிக்கைகளை பின்பற்றுவது உலகம் முழுவதும் உள்ள இயல்பான விஷயம் என்றாலும், மூட நம்பிக்கைகள் மனிதர்களின் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
இந்த மரணங்கள் ஒரே நாளில் நடந்துவிடவில்லை, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் அங்கோலாவின் மத்திய நகரமான காமகுபாவுக்கு அருகில் நடைபெற்ற இறப்புகள் இவை என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
சூனியம் செய்யவில்லை: நிரூபிக்கும் முயற்சி
பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் தீர்த்தம் எனப்படும் மூலிகை திரவத்தை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர், இது ஒரு நபர் சூனியம் செய்கிறாரா இல்லையா என்பதை நிரூபிக்கும் பழங்கால முறை ஆகும்.
பெரும்பாலும் கத்தோலிக்க மற்றும் முன்னாள் போர்த்துகீசிய காலனியான அங்கோலாவில், தேவாலயத்தின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், சில கிராமப்புற சமூகங்களில் சூனியத்தின் மீதான நம்பிக்கை இன்னும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தகக்து.
மாந்திரீகத்தின் மீதான நம்பிக்கை
"மாந்திரீகத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் மக்களுக்கு இதுபோன்ற தீர்த்தங்கள் கொடுப்பது ஒரு பரவலான நடைமுறையாகும்" என்று மாகாண காவல்துறை செய்தித் தொடர்பாளர் அன்டோனியோ ஹோசி தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாந்திரீகத்திற்கு எதிராக சட்டம் இல்லை
அங்கோலாவில் மாந்திரீகத்திற்கு எதிராக எந்த சட்டமும் இல்லை, சமூகங்கள் தங்களுடைய விருப்பப்படி பிரச்சினையை கையாள உரிமை உண்டு. மேலும், மாந்திரீகம், பில்லி சூனியம் போன்றவற்றை செய்வது தொடர்பான நம்பிக்கை அங்கோலாவில் அதிகமாக உள்ளது.
பில்லி சூனியம் செய்ததாக கருதப்படுவர்களை தண்டிக்கும் வகையில் 'மராபுட்' (marabout) எனப்படும் பாரம்பரிய வைத்தியர்கள் கொடுக்கும் மூலிகை நீரை குடிக்க, குற்றம் சாட்டபட்டவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 'மாபுலுங்கோ' (Mbulungowho) எனப்படும் விஷ மூலிகை பானம் வழங்கப்படுகிறது. குற்றம் செய்யாதவர்கள், இந்த பானத்தை குடித்தால் உயிர் பிழைப்பார்கள் என்றும், குற்றம் செய்தவர்கள் உயிரிழப்பார்கள் என்பதும் அங்கோலாவின் நம்பிக்கையாக இருக்கிறது.
மேலும் படிக்க | பாடாய் படுத்தும் களஸ்திர தோஷம்.... மாங்கல்ய தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகுதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ