அபு தாபி: ஐக்கிய அரபு அமிரகத்தை சேர்ந்த இளம்பெண், தன் காதலரை கொலை செய்து உணவாக உட்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 19-ஆம் நாடைப்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக அமிரக காவல்துறை குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணை கைது செய்துள்ளனர். 7 ஆண்டு காதலுக்கு பிறகு தற்போது வோறொரு பெண்னை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்த காதலனை ஆத்திரம் தாங்காமல் இளம்பெண் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொலை செய்யப்பட்ட இளைஞரின் சகோதரர் தனது அண்ணன் சில நாட்களாக காணமல் போக, களத்தில் இறங்கி தேடியுள்ளார். அப்போது அவரது காதலியான கொலையாளி வீட்டிற்கும் சென்று விசாரித்துள்ளார். ஆனால் அவர் அப்போது குழப்பங்கள் நிறைந்த தகவல்களை அளிக்க, பாதிக்கப்பட்டவரின் தம்பி காவல்துறை உதவியை நாடியுள்ளார்.


கொலையாளியின் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறை பலியான இளைஞரின் பற்களை கண்டறிந்துள்ளனர். DNA பறிசோதனைக்கு பின்னர் கொலை செய்யப்பட்டது, தேடப்பட்ட நபர் தான் என்பதும் தெரியவந்துள்ளது.


காவல்துறை விசாரணையில் உண்மைகளை தெரிவித்த இளம்பெண், தன் காதலனை கொன்று அவரது இறைச்சியில் மச்சுபூஸ் என்னும் பாரம்பரிய உணவை சமைத்து வீட்டின் பணியாட்களுக்கு பரிமாறியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் மீது வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.