யூடியூப் வீடியோ மூலம் தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட பெண்!
யூடியூப் வீடியோ மூலம் தானாகவே வீட்டில் பிரசவம் பார்த்துகொண்டு குழந்தை பெற்ற பெண்!
யூடியூப் வீடியோ மூலம் தானாகவே வீட்டில் பிரசவம் பார்த்துகொண்டு குழந்தை பெற்ற பெண்!
அமெரிக்காவின் நேஷ்வில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய டியா ஃப்ரீமேன் என்ற பெண்மனி எவ்வித மருத்துவ உதவியும் இன்றி யூடியூப் உதவியுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார். அதுமட்டும் இன்றி அவர் தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
விடுமுறையை கழிக்க சுற்றுலா சென்ற போது துருக்கியில் உள்ள தங்கும் விடுதி அறையில் தனக்கு கிடைத்த டவல்கள், ஷூ லேஸ், தேநீர் கோப்பை, மற்றும் சிறிய கத்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார். எவ்வித மருத்துவ உதவியும் இன்றி விடுதி அறையின் குளியலறை பெட்டியில் குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாத வாக்கில் தனது பிரசவத்தை அறிந்து கொண்ட டியா, முன்னதாக ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தார். பிரவசத்திற்கு நேரம் இருப்பதை காரணமாக கொண்டு இரண்டு வார சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என நினைத்து டியா பயணத்தை தொடர்ந்தார்.
பயணத்தின் போது விமான நிலைய சோதனை மையத்தில் காத்திருந்த போது டியாவுக்கு வயிற்று வலி அதிகரித்திருக்கிறது. உடனடியாக ஓய்வு எடுக்க முடிவு செய்து இஸ்தான்புல் நகரின் தங்கும் விடுதிக்கு டியா விரைந்தார். பின் தங்கும் விடுதி அறையில் இருந்தபடி பிரசவ வலிக்கான அறிகுறிகளை இணையத்தில் தேடி, இறுதியில் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தெரிந்து கொண்டார்.
பல்வேறு காரணங்களுக்காக மருத்துவ உதவியை நாடாத டியா, மொழி தெரியாத நாட்டில் தனது காப்பீடு ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற சந்தேகம் அடைந்தார். "நாட்டின் அவசர எண் கூட எனக்கு தெரியவில்லை, பின் அதனை நான் கூகுள் செய்திருக்கலாம் என நினைத்தேன்," என அவர் தெரிவித்தார்.
தங்கும் விடுதி அறையினுள், டியா எப்படி குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என கூகுள் செய்திருக்கிறார் தனது தேடலுக்கு வீடியோ மூலம் பதில் பெற்றிருக்கிறார். வீடியோ லோடு ஆகும் நேரத்தில் பாத் டப்-இல் பாதி அளவு நீரை நிரப்பி அதில் சாய்ந்தவாறு படுத்துக் கொண்டார், பின் சில நிமிடங்களில் தனது குழந்தை பிறந்து நீரில் மிதந்தது. குழந்தையின் பாலினம் தெரியாத நிலையில் அதனை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் குழந்தையை கையில் எடுத்தார். குழந்தையை தொப்புள் கொடி சுற்றியிருந்ததை கண்டு மீண்டும் இணையத்தின் கதவை கீபோர்டு வழியே தட்டினார். இணைய வழிகாட்டுதலுடன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினார்.
இணையத்தள வசதியுடன் பெண்மனி தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டு, அதனை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.