7 ஆண்டுகளுக்கு பின் கடத்தப்பட்ட பெண்...? போலீசார் இப்போது கண்டுபிடித்தது எப்படி?
World Bizarre News: 7 ஆண்டுகளுக்கு முன் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் அவரை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
World Bizarre Crime: உலகில் பல குற்றங்கள் தினந்தினம் நடந்து வருகிறது. ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் பல்வேறு காரணங்கள் இருக்கும். அரசியல் ரீதியான குற்றங்கள், பொருளாதார ரீதியான குற்றங்கள், உறவு சார்ந்த குற்றங்கள் என மனித மூளையின் கொடூரமும், தனது இருப்பை உறுதிசெய்வதும் குற்றத்தில்தான் நிறைவடைகிறது எனலாம்.
அதாவது ஒரு குற்றத்தைச் செய்வதன் மூலம் அதிகாரம் கிடைக்கும் என சிலரும், ஒரு குற்றத்தை செய்தால் மட்டுமே தன்னால் உயிர்பிழைத்து வாழ முடியும் என பலரும் இந்த உலகில் உள்ளனர். இப்படி ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு காரணம் இருப்பதை போன்று, ஒவ்வொரு குற்றமும் பல வகையில் வித்தியாசப்படுகிறது. ஆனால், மனிதனின் குரூர குற்றங்கள் அனைத்தும் உணர்ச்சியின் உச்சிக்கே ஒருவனை அழைத்துச் செல்லும் எனலாம்.
திடீரென வந்த போன்
அந்த வகையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த குற்றமும், அதனை தற்போது கண்டறிந்து விடை பெற்ற போலீசாரின் கதையும் அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு பெண் திடீரென தனது வளர்ப்பு பெற்றோருக்கு போன் செய்துள்ளார். தன்னை நெடுஞ்சாலை ஓரம் இருக்கும் ஒரு ஹோட்டலில் தனது விருப்பத்திற்கு மாறாக சிலர் பிடித்துவைத்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் பதவியை கைப்பற்றுவாரா?
இன்க்ஸ்டர் நகரத்தில் உள்ள மோட்டல் என அந்த பெண் குறிப்பிட்டிருந்தாலும் எந்த இடம் என அவர்களிடம் சரியான தகவல் இல்லை. போலீசார் நடத்திய விசாரணையில் Evergreen என்ற பெயரிலான மோட்டலில்தான் அந்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, 7 ஆண்டுகளுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு பெண்ணை, அடைத்துவைத்திருந்த அறையில் இருந்து போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.
அறையில் இருந்த பெண்...
Evergreen மோட்டலில்தான் அவர் இருப்பதாக எப்படி கண்டுபிடித்தீர்கள் என போலீசாரிடம் கேட்டதற்கு,"அழுகை கலந்து குரலில் யாரோ சத்தம் போட்டு கதறும் சத்தம் எங்களுக்கு இந்த பகுதியில் கேட்டது. அதையொட்டியே அவரை கண்டுபிடித்தோம்" என விளக்கம் அளித்துள்ளனர். மேலும், அடைக்கப்பட்டிருந்த கதவை உடைத்து அந்த பெண் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் போலீசார் நுழைந்துள்ளனர். அந்த அறையில் அந்த பெண் மட்டுமே இருந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு தற்போது 30க்கும் மேல் வயதிருக்கும் என கூறிய போலீசார், அந்த பெண்ணின் உடலில் காயம் ஏதும் தென்படவில்லை எனவும் கூறியுள்ளனர். அந்த அறையில் போதைப்பொருள்கள் மற்றும் துப்பாக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணை மீட்டதும் உடனடியாக அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 7 ஆண்டுகளாக பிரிந்திருந்த குடும்பத்துடன் தற்போது அவர் சேர்த்துவைக்கப்பட்டார்.
இது கடத்தலா...?
அந்த பெண் இளம் வயதில் எப்படி காணாமல் போனார், அவர் யார் என்பது குறித்த அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் மேலும் கூறுகையில், "அடுத்தது என்ன என்பது குறித்து நாங்கள் விசாரணையின் மூலம் முடிவு செய்வோம். மனித கடத்தல் போன்ற ஒரு குற்றம் நடந்ததா அல்லது அது குடும்ப வன்முறை சார்ந்த சூழ்நிலையா அல்லது அது வேறுபட்டதா என்பதை பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்வோம்.
யாரோ அவரை விருப்பத்திற்கு எதிராக பிடித்து, அந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றதை நான் கடத்தல் என்ற வார்த்தையைப் உறுதிப்படுத்த விரும்பவில்லை. இது உங்கள் விருப்பத்திற்கு எதிராக நடத்தப்பட்டு கடத்தப்படும் காதல் உறவாக கூட மாறியிருக்கலாம்" என தங்களின் சந்தேகத்தையும் தெரிவித்தனர். இருப்பினும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | அபுதாபி இந்து கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.. ஆனால் சில விதிமுறைகள் உண்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ