மேற்கு சீனா பகுதியில் பூச்சிகள் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியத்தில் தற்போது ஹோலோருசியா மிகாடோ (Holorusia Mikado) குடும்பத்தினைச் சேர்ந்த கொசு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொசு கடந்த ஆகஸ்ட் மாதம் செங்டு (Chengdu) பகுதியில் உள்ள  குய்ன்செங் (Qingcheng) மலைப் பிரதேசத்தில் நடைபெற்ற ஆய்வில் இந்த கொசு கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த கொசுவின் நீளம் 11.15 சென்டிமீட்டர் உள்ளதாகவும், இந்த கொசுக்ககள் ரத்தங்ககளை உறிஞ்சுவது இல்லை, இதற்க்கு மாறாக தேனை மட்டும் உறிஞ்சும் எனக் கூறியுள்ளனர். இந்த வகை கொசுக்ககள் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் காணப்படும்.


உலகில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கொசு இனங்கள் உண்டு, ஆனால் அதில் 100 இனங்கள் மட்டுமே ரத்தத்தை உறிஞ்சி எனவும் கூறினார். 


இந்த கொசுக்ககள் மேற்குப் பகுதியை சேர்ந்த சிச்சுவான், ஹோலூருசியா மிக்கோடோ, செங்டு சமவெளி மற்றும் 2,200 மீட்டருக்கு கீழே உள்ள மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.


இவ்வாறு ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி தெரிவித்தார்.


இந்த அருங்காட்சியகம் ஒரு தனியார் வசம் இருந்தாலும், ஆனால் ஒரு தேசிய மட்ட அருங்காட்சியகம் ஆகும். இதில் 700,000 -க்கும் அதிகமான மாதிரிகள் உள்ளன. அதில் 70-க்கும் மேற்பட்டவை மிகப் பெரியவையாகவும் அல்லது மிக நீண்டவையாகவும் காணப்படுகிறது.