World news: நவம்பர் 23, இன்றைய முக்கிய செய்திகள்
உலகச் செய்திகளில் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்ற நடப்புகளின் சுருக்கமான ஒரு வரி செய்தித் துளிகள்...
புதுடெல்லி: அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, ரஷ்யா, சீனா என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...
- தென் சீனக் கடலில் சீனாவுடனான பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா உறுதி
- செளதியின் பட்டத்து இளவரசர் சல்மானுக்கும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான செய்திகளை செளதி அரேபியா மறுக்கிறது
- லிபியாவில் அமைதியை மீட்பதற்கு துருக்கி தடையாக இருப்பதாக ஜெர்மனி குற்றச்சாட்டு
- பாதுகாப்புச் சட்டத்தை நீக்குவதால் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்படக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சுக்கு எச்சரிக்கை விடுக்கிறது
- மாடர்னா கோவிட் -19 தடுப்பூசி விலையை விட தனது கோவிட் தடுப்பு மருந்து மிகவும் மலிவானது என்று Sputnik V அறைகூவல்
- ஏழை நாடுகளுக்கு 2 பில்லியன் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை UNICEF அடுத்த ஆண்டு அனுப்புவதாக உறுதி
- கியூஆர் (QR) குறியீடு அடிப்படையிலான உலகளாவிய பயண முறைக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) அழுத்தம் கொடுக்கிறார்.
- 12 வது நாளாக தொடர்ந்து அமெரிக்க மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் தென்படுகிறது.
Read Also | பிரபல Youtuber வீடியோ படபிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் 25 கோடி ரூபாய் சேதம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் இப்போது தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR