வாழ்க்கையில், போர் அடிப்பதாக இருந்தாலோ, அல்லது அலுப்பாக இருந்தாலோ, பெரும்பாலானோர் மனதிற்கு பிடித்த காரியங்களை செய்வார்கள். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஒரு அதிசய நபர், தனக்கு வாழ்க்கை ரொம்ப போராக இருப்பதால், மிகவும் ஆபத்தான செடி ஒன்றை வளர்த்து வருகிறார். ரிஸ்க் என்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போல உள்ளதாக தெரிகிறது. பல ஆபத்தான மற்றும் கொடிய தாவரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் Gympie-Gympie என்ற தாவரமானது உலகிலேயே மிகவும் ஆபத்தான தாவரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அது மக்களைத் சித்திரவதை செய்து தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும், இதனால் 'தற்கொலை செடி' என்றும் அழைக்கப்படுகிறது. தாவரத்தைப் பற்றி அறிய மேலும் படிக்கவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிம்பி-ஜிம்பீ, தற்கொலை செடி


இந்த செடி மேலே பட்டால், ஒரே நேரத்தில் சூடான அமிலத்தால் எரிக்கப்படுவது மற்றும் மின்சாரம் தாக்குவது போன்ற ஒரு கொடூரமான  அனுபவத்தை கொடுக்கும். இந்த செடி மேலே பட்டால், அதன் பாதிப்பு பல மாதங்கள் நீடிக்கும். செடி மேலே பட்டால் ஒரு தீவிர ஒவ்வாமை எதிர்வினை ஏற்படுவதோடு, எப்போதாவது அனாபிலாக்டிக் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.



மேலும் படிக்க | Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!


பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக சித்திரவதையை அனுபவிக்கக் கூடும்


ஜிம்பீ-ஜிம்பீ  இலையை தொட்டால், அதன் கொட்டும் விஷம் நிறைந்த முட்கள் சருமத்தில் இருந்து அகற்றப்படாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களை ஒரு வருடத்திற்கும் மேலாக சித்திரவதை செய்யும் திறன் கொண்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


 'உலகின் மிகவும் ஆபத்தான தாவரத்தை' வீட்டில் வளர்க்கும் நபர்


பிரிட்டனில் ஒருவர் 'தனக்கு அலுப்பாக' இருந்ததால் ஜிம்பி-ஜிம்பி செடியை வளர்த்து வருகிறார். இருப்பினும், டேனியல் எம்லின்-ஜோன்ஸ் ஜிம்பி-ஜிம்பை 'மிகவும் பாதுகாப்பாக' வளர்த்து வருவதாக கூறினார்.


உலகிலேயே மிகவும் விஷமுள்ள தாவரம்


ஜிம்பி-ஜிம்பி 'ஆஸ்திரேலிய கொட்டும் மரம்' என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது உலகிலேயே மிகவும் விஷமுள்ள தாவரமாகும்.  ஒரு மனிதன் தாவரத்தை கழிப்பறை காகிதமாகப் பயன்படுத்தியபோது, ​​​​அவர் உயிர் போவதற்கு முன், மிக கொடூரமான வேதனையை அனுபவித்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பாம்பு கடித்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ