தீவிரமாக சேதமடைந்த உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையம்: ஒரு உலை மூடப்பட்டது
Zaporizhzhia nuclear power Damage in attack: உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது
உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது. ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (2022 ஆகஸ்ட் 5) ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றன் மீது மற்றொன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அணுமின் நிலையம் "கடுமையான சேதத்தை" அடைந்தது, இதன் விளைவாக அதன் உலைகளில் ஒன்று மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலால் அணுஉலைகளில் ஒன்று மூடப்பட்டது, மின்கம்பி உடைந்தது, மேலும் ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு ஏற்படுவதான கவலைகளும் எழுந்துள்ளது. அணு உலையில் தீ பற்றும் ஆபத்து இன்னும் கணிசமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. ஆலையின் மீதான ஷெல் தாக்குதல், உக்ரைன் அணு உலைகளின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள்
ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யப் படைகள் Zaporizhzhia ஆலையை ஆக்கிரமித்துள்ளன. ரஷ்யப் படையினரிடம் கனரக ஆயுதங்களை வைத்திருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில், அணு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் படையினர் மீது மாஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், நேற்று (2022 ஆகஸ்ட் 6 சனிக்கிழமை), இந்தத் தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவை விமர்சித்தது ஐரோப்பிய ஒன்றியம். அதாவது ஆலையை கைப்பற்றினாலும் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா கூறுகிறது. எது எப்படியிருந்தாலும், உக்ரைனின் மண்ணில் இருக்கும் ஆலை விபத்தின் விளைவுகளை சுற்று வட்டாரப் பகுதி நீண்ட காலத்துக்கு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற அச்சங்கள் அதிகரித்துள்ளன.
ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை இந்த ஆலையை அணுக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர் ஜோசப் பொரெல் வலியுறுத்தினார். பல வாரங்களாக, IAEA ஆலையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்ப முயற்சித்து வருகிறது. இதுவரை, உக்ரைன் முன்முயற்சிகளை நிராகரித்துள்ளது.
மேலும் படிக்க | ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி
பிப்ரவரி 24 முதல் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகின்றன. ஜபோரிஜியா அணுமின் நிலையம் இருக்கும் இந்தப் பகுதியில் மோதல் அதிகமானால், சோர்னோபில் அணு ஆலையில் ஏற்பட்டது போன்று மற்றுமொரு பேரழிவு ஏற்படும் என்று அனைவருக்கும் அச்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் கருத்துப்படி, சர்வதேச அணுசக்தி முகமை, ஆலைக்கு சென்று கண்காணிப்பது என்பது சர்வதேச சமூகத்தின் பார்வையில் ஆலையின் மீதான ரஷ்யாவின் உரிமையை சட்டப்பூர்வமாக்கும். உக்ரேனிய ஊழியர்கள் தங்கியிருந்தபோதும், ஆலை இன்னும் ஆற்றலை உற்பத்தி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தாக்குதல்களுக்கு சற்று முன்பு ஊழியர்கள் அந்த ஆலையை விட்டு ஓடிவிட்டனர் என்று கூறப்படுகிறது.
உக்ரைனின் அரசு நடத்தும் அணுமின் நிலையங்களின் ஆபரேட்டரான Energoatom இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "அணு உலை அமைந்துள்ள பகுதியில், ஆலையின் தளத்தில் மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.அதில், "ஹைட்ரஜன் கசிவு மற்றும் கதிரியக்கங்கள் கசியும் அபாயங்கள் உள்ளன என்பதோடு, தீ ஆபத்தும் அதிகமாக உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தியது உக்ரைனா ரஷ்யாவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ