`ஜோம்பி தீ` பற்றி எரியும் சைபீரிய காடு.. உருகும் பனிப் பாறைகள்..
சைபீரிய காடுகள் வெப்ப அலைகளின் கீழ் சிக்கி தவிக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான வானிலை மாற்றங்கள் தான் செப்டம்பர் மாதத்தின் பனி உருகும் அளவை தீர்மானிக்கும்.
சைபீரியா: சைபீரிய காடுகள் வெப்ப அலைகளின் கீழ் சிக்கி தவிக்கிறது. அந்த பிராந்தியத்தின் பல பகுதிகளில் வெப்ப நிலை 40 டிகிரியாக உள்ளது. வெள்ளிக்கிழமை, ஆர்க்டிக் துருவத்திற்கு வடக்கே அமைந்துள்ள சைபீரியாவின் கட்டங்காபகுதியில் அதிகபட்சமாக 78 டிகிரி வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 46 டிகிரி அதிகம். அதேபோல கட்டங்காவில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி ஆகும்.
மே மாதத்தில் சைபீரியாவில் வெப்பமான வானிலை நிலவுவது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, ஏனெனில் இது குளிர்காலத்திற்கு பிறகு இங்கு வானிலை இப்படி ஒரு நிலையான அம்சமாக மாறியுள்ளது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது நிலவும் சராசரி வெப்பநிலை மாற்றமானது, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
சைபீரியாவில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு ஆர்க்டிக் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்கெனவே சில விளைவுகளைக் காட்டத் தொடங்கி விட்டது. மிக பெரிய சைபீரிய காடுகளில் தீ பற்றி எரிகிறது. இதனால் இந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட விரைவாகவே பனி உருகி விடும்.
மேலும் செய்தி படிக்க: பிரான்ஸை தொடர்ந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்தியது பெல்ஜியம்!
சமீபத்திய ஆண்டுகளில், விஞ்ஞானிகள் ஆர்க்டிக் பரப்பின் பெர்மாஃப்ரோஸ்டின், அதாவது பனிப்பாறைகளுக்கு கீழே உள்ள மண்ணின் ஸ்திரத்தன்மை குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், சைபீரியா ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் கோடை காலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால், சுமார் மூன்று மில்லியன் ஹெக்டேர்களை எரிந்து விட்டன. இப்பகுதியின் சில பகுதிகளில் ஏற்படும் அசாதாரணமான தீ விபத்துக்களை புரிந்துகொள்வதில் விஞ்ஞானிகளுக்கு சிக்கலாகவும் கடினமாகவும் உள்ளது.
சில ஆராய்ச்சியாளர்கள் இந்த தீ "ஜோம்பி தீ" என்று அழைக்கிறார்கள், அதாவது "கொடூரமான காட்டுத்தீ" என்று கூறுகின்றனர். இந்த கடுமையான தீ, சைபீரிய குளிர்காலத்தில் ஒரு பனி படலத்தின், அதாவது ஸ்னோபேக்கின் கீழ் புதைவதிலிருந்து தப்பிக்க முடியும். இதை சில விஞ்ஞானிகள் ஸ்னோபேக் ஒரு இன்சுலேட்டராக, அதாவது பாதுகாப்பு உறையாக செயல்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். மேலும் சிலவிஞ்ஞானிகள், இது பனி படலங்களுக்கு கீழ் உள்ள தாவரங்களின் அடுக்கு பகுதியில் சைபீரியவில் நிலவும் குளிர் காற்றை விட வெப்பமாக வைத்திருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பார்க்க: இளைஞர்களின் கணவத்தை ஈர்க்கும் நடிகை சமந்தாவின் அட்டகாசமான புகைப்படம்!
ஆர்க்டிக் காலநிலை மாற்றத்தை ஆராய்ச்சி செய்யும் இர்வின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர் ஜேக் லேப், சைபீரியாவின் முன்னேற்றங்கள் அசாதாரணமானது என்று வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.
"சைபீரியா காட்டு வெப்பநிலை மாற்றங்களுக்கு பெயர் போனவை என்றாலும், இந்த ஆண்டு இதுவரை இப்பகுதியின் நிலைத்தன்மை மற்றும் வெப்பநிலைய வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த வாரத்தின் பருவநிலையின் தீவிர நிகழ்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு இதுவாகும். மேற்கு சைபீரியாவின் சில பகுதிகளில் கோடை போன்ற வெப்பநிலை அதிகமாக உள்ளதற்கு ஒரு விதத்தில் நன்றி தெரிவிக்கலாம். ஆர்க்டிக்கின் முழு சைபீரிய கடற்கரை பகுதியிலும், பனி மூடிய பகுதிகளின் அளவுகளின் தரவுகளில் ஒரு எதிர்மறை பதிவுகள் பிரதிபலிப்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
மாணவர் ஜேக்லேப் கூறுகையில், "காரா கடல் பகுதியில் உள்ள பனி மிகக்குறைந்த வெப்ப அளவைத் தொட்டுள்ளது மற்றும் வடக்கு சைபீரியாவின் கடற்கரையோரத்தில் பனி மூடிய பிரதேசங்கள் சராசரியாக இருக்கும் அளவை விட மெல்லியதாக உள்ளன. வெப்பநிலையின் உயர்வு, கடலின் மேல் உறைந்து கிடக்கும் பனி பாறைகளையும் பனி படலங்களையும் உருக வைக்க ஒரு காரணமாக இருக்கலாம்" என்று கூறினார்.
"இதே வானிலை நீடித்தால், கோடைகாலத்தில் கடல் பனி உருகி மேலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் லேப் கூறினார். "ஒட்டுமொத்தமாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான வானிலை மாற்றங்கள் தான் செப்டம்பர் மாதத்தின் பனி உருகும் அளவை தீர்மானிக்கும்" என்றும் கூறினார்.
(மொழியாக்கம் - வானதி கிரிராஜ்