மிகவும் அரிய வகையைச் சேர்ந்த, உலகின் கடைசி ஆண் காண்டாமிருகமான சுடான் கடந்த 19-ம் தேதி (திங்கள்கிழமை) உயிரிழந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் கடைசி ஆண் காண்டாமிருகமான சுடான்-க்கு 45 வயதாகிறது. கென்யாவிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சுடான் காண்டாமிருகம் வாழ்ந்து வந்தது. கடந்த சில மாதங்களாகவே உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சூடானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் கருணை கொலை செய்ய முடிவெடுத்தோம். இதனால் டாக்டர்கள் சுடான் காண்டாமிருகத்தின் உயிரை போக்கினார்கள். 



 


ஆனால் இறந்த சுடான் காண்டாமிருகத்துக்கு இரு பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது, உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் இறந்து விட்ட நிலையல், இந்த அரிய வகையை காண்டாமிருகங்களில் இரு பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே உலகில் உள்ளன.