உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளம்பெண், தொடர் பாலியல் தூண்டல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பின்னர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரின் சித்வேக்ஹேடா கிராமத்தை சேர்ந்தவர் நேஹா குஸ்வானா (22), இளங்கலை பயின்று வரும் மாணவியான இவர் நேற்றைய தினம் தன் கிராமத்தில் இருக்கும் மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் கோரி மற்றும் அவரது சகோதரர் சோனு எனும் இருவரும் நேஹாவிற்கு தொடர் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளதாகவும், அதை பொருத்துக்கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்துகெண்டதாகவும் காவல்துறை தரப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ரத்னகாந்த் பாண்டே தெரிவிக்கையில், பலியான நேஹாவின் சடலத்தில் இருந்து மரண வாக்குமுலம் கடுதாசி கிடைத்துள்ளது. இந்த கடிதத்தில் அவர் இறப்பிற்கான காரணம் சஞ்சய் கோரி மற்றும் அவரது சகோதரர் சோனு எனவும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் என தெரித்தார்.


இதனையடுத்து குற்றம் சட்டப்பட்ட சஞ்சய் கோரி மற்றும் அவரது சகோதரர் சோனு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்!