கூகுள் நிறுவனம் ஜி-மெயில் சேவையில் தொடர்ந்து புதிய அப்டேட் மற்றும் நம்பமுடியாத வசதிகள் சேர்த்து வருகிறது. மேலும், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் ஜி-மெயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். மேலும் வங்கி சார்ந்த பல்வேறு பணிகளுக்கு இந்த ஜிமெயில் சேவை மிகவும் அவசியமாக இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன்பு ஜி-மெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் தற்போது வாடிக்கையாளர்கள் உபயோகத்திற்கு வந்துள்ளது. மேலும் ஜி-மெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை பட்டன் மூலம் இணைக்கும் வசதியும் வந்துள்ளது. இனி ஜி-மெயில் சேவையில் எளிமையாக புகைப்படங்களை வைக்க வழிவகை செய்துள்ளது இந்த நிறுவனம்.


தற்போது ஜி-மெயில் சேவையில் வழங்கப்பட்டுள்ள புதிய சிறப்பம்சம் என்ன என்றால், உங்களுக்கு வரும் முக்கியாமான மின்னஞ்சல்களுக்கு உடனே குவிக் ரிமைன்டர்ஸ் எனும் வசதியின் மூலம் பதில் அனுப்ப முடியும். அதுமட்டும் இன்றி அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்பதை ஜி-மெயில் பரிந்துரை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜி-மெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும். 


மிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜி-மெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜி-மெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த புதிய வசதியை பெற..! 


புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜி-மெயில் செட்டிங்ஸ் (Settings) - டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.


புதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் - கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.