PUBG பிரியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி! இன்று முதல் இந்தியாவில் PUBG Mobile, Lite versionக்கு தடா…
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் PUBG விளையாட்டு தடைசெய்யப்பட்டது.
புதுடில்லி: PUBG மொபைல் மற்றும் PUBG Mobile Lite வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவில் வேலை செய்யாது என்று Tencent Games நிறுவனம் அறிவித்துள்ளது.
"இந்த முடிவு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது" என்று கூறும் PUBGயின் உரிமையாளரான Tencent Games நிறுவனம், இந்தியாவில் தங்கள் ஆதரவுக்கு PUBG மொபைல் மற்றும் PUBG மொபைல் லைட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.
"பயனர் தரவைப் பாதுகாப்பது எப்போதுமே எங்களுடைய முன்னுரிமையாகும், நாங்கள் எப்போதும் இந்தியாவிற்கு பொருந்தக்கூடிய தரவு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குகிறோம். எங்கள் தனியுரிமைக் கொள்கையில் கூறப்பட்டுள்ளபடி, அனைத்து பயனர்களின் விளையாட்டுத் தகவல்களும் வெளிப்படையான முறையில் செயல்படுத்தப்படுகின்றன" என்று நிறுவனம் கூறியுள்ளது.
செப்டம்பர் 2 ம் தேதி PUBG மொபைல் மற்றும் PUBG மொபைல் லைட்டை தடை செய்ய இந்திய அரசு எடுத்த முடிவின் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்தது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் PUBG விளையாட்டு தடை செய்யப்பட்டது.
PUBG கார்ப்பரேஷன் சமீபத்தில் டென்செண்டுடனான தங்கள் கூட்டாண்மையை திரும்பப் பெறுவதாகவும், இது தொடர்பாக தீர்வைக் காண இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் அறிவித்தது.
உலகளவில் 600 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் PUBG-ஐ பதிவிறக்கம் செய்துள்ளனர். 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விரும்பி விளையாடும் PUBG விளையாட்டு, இந்தியாவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் PUBG மொபைல் உலகளாவிய வருவாய் 1.3 பில்லியன் டாலர் (சுமார் 9,731 கோடி ரூபாய்), அதன் வாழ்நாள் வசூல், 3 பில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 22,457 கோடி) ஆகும். இந்தியாவில் அதிக பதிவிறக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது PUBG. கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்ததால் 175 மில்லியன் பேர் PUBGஐ பதிவிறக்கம் செய்தனர்.
PUBG மொபைலின் வெற்றிடத்தை நிரப்ப உள்நாட்டு மல்டிபிளேயரும், இந்திய கேமிங் நிறுவனமுமான nCore, FAU-G என்ற அதிரடி விளையாட்டை அறிவித்துள்ளது. FAU-G அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR