கூகுளுக்கு போட்டி Safari என்றால் அமைதியாக போருக்கு தயாராக்கும் Apple @search engine

Apple தனது அனைத்து ஐபோன்களின் operating systemகளின்இயல்புநிலை தேடலில் Safariயைச் சேர்த்தது. Google நிறுவனத்துடன் போட்டியிடுவதற்காக, ஆப்பிள் தனது search engine-ஐ விரிவுபடுத்த அதிக அளவிலான பணம் முதலீடு செய்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2020, 06:36 PM IST
  • கூகுளுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் ஆப்பிள்.
  • புதிய iOS இல் மாற்றங்களைச் செய்தது.
  • கூகிளின் தேடுபொறி வணிகத்தின் மீது ஆப்பிளின் கண்பட்டு விட்டது...
கூகுளுக்கு போட்டி Safari என்றால் அமைதியாக போருக்கு தயாராக்கும் Apple @search engine title=

புதுடில்லி: இணையத்தில் தேவையானதை அறிந்துக் கொள்ள நாம் Google செய்கிறோம். Google என்பது ஒரு தேடுபொறி (search engine) Google தேடுபொறி, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டது. Google என்பது இப்போது எதையும் கண்டுபிடிக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது.  ஆப்பிள் மட்டும் சளைத்ததா என்ன? அமைதியாக உலகளவில் Google search engine உடன் போட்டியிடத் தொடங்கியிருக்கிறது. ஆப்பிள் தனது தேடுபொறி சஃபாரியை உலகளவில் பிரபலமாக்க தயாராகி வருகிறது.

IOS 14 இல் default search option ஆக மாறுகிறது Safari

தனது புதிய iOS 14 இல் ஆரவாரமில்லாமல் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது ஆப்பிள். wccftech.com என்ற தொழில்நுட்ப தளத்தின் படி, ஆப்பிள் தனது அனைத்து ஐபோன்களின் இயக்க முறைமையிலும் இயல்புநிலை தேடலில் சஃபாரியைச் சேர்த்துவிட்டது. 
கூகிள் நிறுவனத்துடன் போட்டியிடுவதற்காக, ஆப்பிள் தனது தேடுபொறியை விரிவுபடுத்த நிறைய பணம் முதலீடு செய்கிறது.

Safariஐ சேர்க்கும் ஆப்பிளின் முடிவுக்கு காரணம் என்ன?

ஆப்பிள் அதன் டெஸ்க்டாப் மற்றும் மொபைலுக்காக தனி தேடுபொறிகளை இயக்குகிறது. இந்த தேடுபொறி குறிப்பிட்ட ஆப்பிள் பயனர்களுக்கு மட்டுமே. ஆனால் கூகுளின் அதிகரித்துவரும் வருமானத்தையும் செல்வாக்கையும் கருத்தில் கொண்டு, ஆப்பிள் தனது தேடுபொறியை சாதாரண மக்களிடையே பிரபலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

Read Also | நேரடி ஒளிபரப்பிற்கான நேர வரம்பை   4 மணி நேரம் வரை நீட்டிக்கிறது Instagram

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News